சவறை பாருகுட்டி அம்மா
சவறை பாருகுட்டி அம்மா | |
---|---|
சவறை பாருகுட்டி அம்மா ஒரு கதகளி முத்திரையை காண்பிக்கிறார், 2011. | |
பிறப்பு | செக்காட்டு கிழக்கெத்தில், கேரளா, இந்தியா | 12 பெப்ரவரி 1943
இறப்பு | 7 பெப்ரவரி 2019 சவறை, கேரளா | (அகவை 75)
தேசியம் | இந்தியா |
பணி | கதகளி நடனக் கலைஞர், நடன ஆசிரியர் |
பெற்றோர் | என். சங்கரன் ஆசாரி நானியம்மா |
விருதுகள் | கேரள கலாமண்டலம் கலாரத்னம்[1] |
சவறை பாருகுட்டி அம்மா (Chavara Parukutty Amma) (12 பிப்ரவரி 1943 - 7 பிப்ரவரி 2019) கதகளி நடன நாடகத்தின் இந்தியக் கலைஞர் ஆவார். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த கதகளியில் புகழ்பெற்ற ஒரு சில பெண்களில் இவரும் ஒருவராக இருந்தார். கேரளாவின் பாரம்பரியக் கலைக்கு இவர் செய்த சேவைகளுக்காக, கேரள கலாமண்டலமும், கேரள சங்கீத நாடக அகாதமியும் தங்களது விருதுகளை வழங்கி கௌரவித்தன.
வாழ்க்கை
[தொகு]பாருகுட்டி அம்மா, பொற்கொல்லரான என் சங்கரன், நானியம்மா ஆகியோரது மூன்று குழந்தைகளில் இளையவராக கேரளாவின் செக்காட்டு கிழக்கெத்தில் பிறந்தார். [2] காமங்குளங்கரை பள்ளியிலும், சவறை உயர்நிலைப்பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கொல்லம் எஸ்.என் மகளிர் கல்லூரியில், பல்கலைக்கழத்திற்கு முன்படிப்பையும், கொல்லம் பாத்திமா மாதா தேசிய கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். [3]
ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராகப் பயிற்றுவிக்கப்பட்ட இவர், தனது இளம் வயதிலேயே கதகளிக்கு மாறினார். இவரது முதல் ஆசிரியர் முத்துபிலக்காடு கோபால பணிக்கர் என்பராவார். [4]
தொழில்
[தொகு]இவரது 14 வயதில், சவறையில் உள்ள கோட்டங்குலங்கரை தேவி கோவிலில் அறிமுகமானார். [2] அந்த காலத்தில், பெண்கள் இவ்வவகை நடனத்தில் பயிற்சி எடுக்கத் தயங்கினர். கதகளித் துறையில் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்து வந்தனர். அவர்களே ஆண் மற்றும் பெண் வேடங்களில் நடிப்பார்கள். இவர் முக்கியமாக பெண் வேடங்களில் நடித்தார். ஆனாலும் ஆண் பாத்திரங்களையும் சித்தரித்தார். [3]
இவரது இளமை பருவத்தில், கதகளி முக்கியமாக உயர் சாதியினரின் பெண்களிடையே ஆர்வமாக இருந்தது. ஒரு பொற்கொல்லரின் மகள் என்பதால், பாருகுட்டி உள்ளூர் நடனப் பள்ளியான லீலாமணி நிருத்தியகலாலயத்தில் சேர போராட வேண்டியிருந்தது . இவருக்கு சிறிய வேடங்களே வழங்கப்பட்டது. இவர் நடன நாடகத்தில் முக்கிய பாகங்களை நிகழ்த்தத் தொடங்கிய பின்னர், போருவாழி ஸ்ரீகிருஷ்ணவிலாசம் கலியோகம் என்ற நாட்டிய நிறுவனத்தில் சேர்ந்தார். இதற்குப் பின்னரே இவரது பெயர் திருவிழாக்களில் தோன்றியது. [5]
பாருகுட்டி அம்மாவின் அறிமுகமானது 1958ஆம் ஆண்டில் "பூதனை மோட்சம்" என்ற நடன நாடகத்தில் இலலிதா என்ற பாத்திரத்தில், கிருட்டிணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை என்ற அரக்கியின் வேடத்தில் இருந்தது. பின்னர் இவர் போருவாழி கோபால பிள்ளையின் கீழ் ஆண் வேடங்களில் பயிற்சிபெறத் தொடங்கினார். கல்யாணசௌகந்திகத்தில் வீமன் வீமனாக நடித்திருந்தார். [6]
கதகளியின் மேதையான மாங்குளம் விஷ்ணு நம்பூதிரி, இவரது நடிப்பைக் கண்டு, கதகளியில் ஒவ்வொரு பெண் வேடத்திலும் மேலதிக பயிற்சியை இவருக்கு வழங்கினார். சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியின் பாத்திரத்தில் இவரது உணர்ச்சிகளும், நுணுக்கமும் மிகவும் பாராட்டப்பட்டது. ஆனாலும், இவர் பெரும்பாலும் கசன் ஆண் பாத்திரத்திலும் நடித்தார். [2]
2003 ஆம் ஆண்டில், சங்கரமங்கலத்தில் கேரள நாடிய தாரா என்ற நடனப் பள்ளியைத் திறந்தார். [4]
இறப்பு
[தொகு]இவருக்கு, நடனக் கலைஞரான தன்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். [2] இவர் 2019 பிப்ரவரி 7 அன்று கொல்லம் அருகே சவறையில் இறந்தார். [4]
ஆவணப்படம்
[தொகு]கதகளியில் 50 காலத்தை நிறைவு செய்த பருகுட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு "'சவறை பாருகுட்டி: கதகளியிலே ஸ்த்ரீபர்வம்' என்ற ஒரு ஆவணப்படத்தை பி. ஆர். ஸ்ரீகுமார் என்பவர் தயாரித்திருந்தார். [7]
குறிப்புகள்
[தொகு]- Shwetha E. George (17 January 2012). "They dance despite the disparity". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/dance/They-dance-despite-the-disparity/article13368567.ece.
- P. Geetha. Kaliyammamar.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalamandalam fellowship, awards announced". The Hindu. 30 October 2013. https://www.thehindu.com/news/national/kerala/kalamandalam-fellowship-awards-announced/article5285813.ece. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 V.R. Prabodhachandran Nayar (15 February 2019). "The curtain falls". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/the-curtain-falls/article26277385.ece. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ 3.0 3.1 "Kathakali artist Chavara Parukutty passes away". The New Indian Express. 8 February 2019 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190218082129/http://www.newindianexpress.com/states/kerala/2019/feb/08/kathakali-artist-chavara-parukutty-passes-away-1935886.html. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ 4.0 4.1 4.2 "Noted Kathakali artiste Chavara Parukutty Amma passes away at 76". The News Minute. 8 February 2019. https://www.thenewsminute.com/article/noted-kathakali-artiste-chavara-parukutty-amma-passes-away-76-96393. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ "Kathakali loses a path-breaker". The Hindu. 9 February 2019. https://www.thehindu.com/news/national/kerala/kathakali-loses-a-path-breaker/article26219339.ece. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ Sreevalsan Thiyyadi (9 February 2019). "Chavara Parukutty: Mother of an unfolding revolution in Kathakali". Manorama. https://english.manoramaonline.com/lifestyle/news/2019/02/08/chavara-parukutty-mother-of-unfolding-revolution-kathakali.html. பார்த்த நாள்: 17 February 2019.
- ↑ "Aranmula in focus". The Hindu. 19 February 2015. https://www.thehindu.com/features/metroplus/aranmula-in-focus/article6912765.ece. பார்த்த நாள்: 17 February 2019.