கம்சன்
Appearance


பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.
வசுதேவர்-தேவகியின் இணையரின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.[1]