சமயநல்லூர்
சமயநல்லூர் | |
— சிறுநகரம் — | |
ஆள்கூறு | 9°58′45″N 78°02′02″E / 9.979100°N 78.033900°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 177 மீட்டர்கள் (581 அடி) |
சமயநல்லூர் (Samayanallur) தேசிய நெடுஞ்சாலை 7இல், மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இது மதுரை மாவட்டத்தின் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும்.[4]மதுரையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, இவ்வூரில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது தேனி மக்களவைத் தொகுதி மற்றும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ளது.[5]
அமைவிடம்
[தொகு]மதுரை மாவட்டத்தில், (9°58′45″N 78°02′02″E / 9.9791°N 78.0339°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சமயநல்லூர் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 9,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 4,589 ஆண்கள், 4,638 பெண்கள் ஆவார்கள். சமயநல்லூரில் 1000 ஆண்களுக்கு 1011 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது. சமயநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.45%, பெண்களின் கல்வியறிவு 79.69% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானது. சமயநல்லூர் மக்கள் தொகையில் 943 (10.22%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 87.61% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 8.84%, இசுலாமியர்கள் 3.50% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சமயநல்லூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 13.81%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சமயநல்லூரில் 2,440 வீடுகள் உள்ளன.[6]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. Retrieved 2015-03-10.
- ↑ "நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தொகுதிகளின் பட்டியில்" (PDF). தமிழ்நாடு. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2008-10-31. Retrieved 2008-10-11.
- ↑ Samayanallur Population Census 2011 பார்த்த நாள்: டிசம்பர் 29, 2015