கோனிகொப்பால்
Appearance
கோனிகொப்பால்
கோனிகொப்பா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°11′00″N 75°55′39″E / 12.1833°N 75.9276°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குடகு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 7,251 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம், குடகு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கேஏ-A12 |
கோனிகொப்பால் (Gonikoppal) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும்.
புள்ளிவிவரங்கள்[தொகு]
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ,[1] இந்த ஊரின் மக்கள் தொகை 7251 ஆகும். ஆண்களில் 52%, பெண்கள் 48%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83%, பெண் கல்வியறிவு 73%. கோனிகோப்பலில், 13% மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.
கோனிகொப்பல் விராஜ்பேட்டை வட்டத்தில் உள்ளது. இது மைசூர் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளத்திற்கு அருகாமையில் இருப்பதால் குடகு மாவட்டத்தின் வணிக மையமாகவும் உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்[தொகு]
- பட்சி பாதாளம் என்ற ஒரு மலைப்பாங்கானப் பகுதி குட்டா என்ற இடத்திற்கு அருகே உள்ளது. திருநெல்லி கோயிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மலையேறலாம். மலையடிவாரத்தில் பல பறவை இனங்கள் கொண்ட ஒரு குகை உள்ளது.
- குட்டா அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. எனவே இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. காட்டில் உள்ள இருப்பு அருவி குட்டாவிலிருந்து சிறு தூரத்தில் அமைந்துள்ளது. குட்டாவிலிருந்து சாலை கபினி உப்பங்கழிகள் மற்றும் எச்டி கோட் வரை செல்கிறது.
மேலும் காண்க[தொகு]
- மடிக்கேரி
- விராசுப்பேட்டை
- பொன்னம்பேட்டை
- குட்டா
- சுந்திகொப்பா
- நாபோக்லு
- குசால்நகர்
- சோமவாரப்பேட்டை
- மங்களூர்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிப்பயணத்தில் கோனிகொப்பால் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.