உள்ளடக்கத்துக்குச் செல்

கெமாமான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமாமான் (P040)
மலேசிய மக்களவைத் தொகுதி
 திராங்கானு
Kemaman (P040)
Federal Constituency in Terengganu
கெமாமான் மக்களவைத் தொகுதி
(P040 Kemaman)
மாவட்டம் கெமாமான் மாவட்டம்
 திராங்கானு
வாக்காளர்களின் எண்ணிக்கை141,790 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகெமாமான் தொகுதி
முக்கிய நகரங்கள்கிஜால், கெமாசிக், கெர்த்தே, கெமாமான் மாவட்டம்
பரப்பளவு84.9 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமது சம்சுரி மொக்தார்
(Ahmad Samsuri Mokhtar)
மக்கள் தொகை215,582 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கெமாமான் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (94.1%)
  இதர இனத்தவர் (0.4%)

கெமாமான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kemaman; ஆங்கிலம்: Kemaman Federal Constituency; சீனம்: 甘馬挽國會議席) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P040) ஆகும்.[8]

கெமாமான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து கெமாமான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

கெமாமான் மாவட்டம்

[தொகு]

கெமாமான் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

கெமாமன் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது. கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.

உலு திராங்கானு

[தொகு]

இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் கிஜால், கெர்த்தே மற்றும் கெமாசிக். இந்த மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. ஏறக்குறைய 1000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. உலு திராங்கானு மாவட்டத்திற்கு அடுத்த நிலையில், இந்த மாவட்டம் மூன்றாவது பெரிய மாவட்டமாகும்.

கெமாமான் மக்களவைத் தொகுதி

[தொகு]
கெமாமான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் கெமாமான் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P029 1959–1963 வான் யகயா வான் முகமது
(Wan Yahya Wan Mohamed)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P029 1963–1964 வான் யகயா வான் முகமது
(Wan Yahya Wan Mohamed)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969 வான் மொக்தார் அகமது
(Wan Mokhtar Ahmad)
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10]
3-ஆவது மக்களவை P029 1971–1973 வான் மொக்தார் அகமது
(Wan Mokhtar Ahmad)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P034 1974–1976 வான் அப்துல் காதர் இசுமாயில்
(Wan Abdul Kadir Ismail)
1976–1978 அப்துல் மனான் ஒசுமான்
(Abdul Manan Othman)
5-ஆவது மக்களவை 1978–1982 இசுமாயில் மன்சூர் சாயிது
(Ismail Mansor Said)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P037 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P040 1995–1999 ரம்லி தாயிப்
(Ramli Taib)
10-ஆவது மக்களவை 1999–2004 அப்துல் ரகுமான் யூசோப்
(Abd Rahman Yusof)
மாற்று முன்னணி
(கெஅடிலான்)
11-ஆவது மக்களவை 2004–2008 அகமது சப்ரி சிக்
(Ahmad Shabery Cheek)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2020 சே அலியாஸ் அமீத்
(Che Alias Hamid)
காகாசான் செஜத்திரா
(மலேசிய இசுலாமிய கட்சி)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–2023
2023–தற்போது வரையில் அகமது சம்சுரி மொக்தார்
(Ahmad Samsuri Mokhtar)

கெமாமான் தேர்தல் முடிவுகள்

[தொகு]

கெமாமான் இடைத்தேர்தல் 2023

[தொகு]

(சே அலியாஸ் அமீத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்)

மலேசிய இடைத்தேர்தல், 2 டிசம்பர் 2023
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அகமது சம்சுரி மொக்தார்
(Ahmad Samsuri Mokhtar)
64,998 70.06% + 11.95%
பாரிசான் நேசனல் ராஜா முகமது அபான்டி
(Raja Mohamed Affandi)
27,778 29.94% - 4.13%
செல்லுபடி வாக்குகள் (Valid) 92,776 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 478
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 35
வாக்களித்தவர்கள் (Turnout) 93,289 65.76% - 15.36%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 141,043
பெரும்பான்மை (Majority) 37,220 40.12% + 16.08%
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
1 மலேசிய இசுலாமிய கட்சி சே அலியாஸ் அமீத்
(Che Alias Hamid)
65,714 58.11% + 14.05%
2 பாரிசான் நேசனல் அகமது சாயிட்
(Ahmad Said)
38,535 34.07% - 7.60%
3 பாக்காத்தான் அரப்பான் அசுனி சுடின்
(Hasuni Sudin)
8,340 7.37% - 6.90%
4 தாயக இயக்கம் ரொசுலி அப்துல் கனி
(Rosli Abd Ghani)
506 0.45% + 0.45%
செல்லுபடி வாக்குகள் (Valid) 113,095 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 1,288
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 150
வாக்களித்தவர்கள் (Turnout) 114,553 81.12% - 4.39%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 139,423
பெரும்பான்மை (Majority) 27,179 24.04% + 21.65%
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  11. "FEDERAL GOVERNMENT GAZETTE" (PDF). P.038 Hulu Terengganu. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.
  12. "FEDERAL GOVERNMENT GAZETTE" (PDF). P.038 Hulu Terengganu. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]