உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் நைட்ரைடு
இனங்காட்டிகள்
12380-95-9
InChI
  • InChI=1S/3Cd.2N/q3*+2;2*-3
    Key: DSZUCHKZKXFZPK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cd+2].[Cd+2].[Cd+2].[N-3].[N-3]
பண்புகள்
Cd3N2
வாய்ப்பாட்டு எடை 365.26 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்[1]
அடர்த்தி 7.67 கி·செ.மீ−3[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக நைட்ரைடு
பாதரச நைட்ரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காட்மியம் நைட்ரைடு (Cadmium nitride) என்பது Cd3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியத்தின் நைட்ரைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

180 பாகை செல்சியசு வெப்பநிலையில் காட்மியம் அமைடு வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு காட்மியம் நைட்ரைடு உருவாகிறது:[1]

3Cd(NH2)2 -> Cd3N2 + 4 NH3

210 பாகை செல்சியசு வெப்பநிலையில் காட்மியம் அசைடும் வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு காட்மியம் நைட்ரைடு உருவாகிறது.[2]

பண்புகள்

[தொகு]

காட்மியம் நைட்ரைடு கருப்பு நிற திடப்பொருளாகும். நீர் மற்றும் காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது இது சிதைகிறது. நீர்த்த அமிலங்கள் அல்லது காரங்களுடன் வினைபுரியும் போது காட்மியம் நைட்ரைடு வெடிக்கும். மாங்கனீசு(III) ஆக்சைடு கட்டமைப்பின் தலைகீழ் வடிவப் படிகவடிவத்தில் காட்மியம் நைட்ரைடு உள்ளது. இதன் அணிக்கோவை மாறிலி a = 1079 பைக்கோமீட்டர்களாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Handbuch der präparativen anorganischen Chemie / 1 (in ஜெர்மன்). Stuttgart. p. 1044. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.
  2. Karau, Friedrich; Schnick, Wolfgang (2007). "Synthese von Cadmiumnitrid Cd3N2 durch thermischen Abbau von Cadmiumazid Cd(N3)2 und Kristallstrukturbestimmung aus Röntgen-Pulverbeugungsdaten" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 633 (2): 223–226. doi:10.1002/zaac.200600253. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_நைட்ரைடு&oldid=4068349" இலிருந்து மீள்விக்கப்பட்டது