காட்மியம் துத்தநாக தெலூரைடு
காட்மியம் துத்தநாக தெலூரைடு (Cadmium zinc telluride) என்பது CdZnTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆங்கிலத்தில் CZT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இச்சேர்மம் காட்மியம், துத்தநாகம், தெலூரியம் தனிமங்கள் சேர்ந்த ஒரு சேர்மமாகும். மிகச்சரியாகச் சொல்வதென்றால் இதை காட்மியம் தெலூரைடு மற்றும் துத்தநாகத் தெலூரைடின் உலோகக் கலவை என்று குறிப்பிடலாம். நேரடியான பட்டை இடைவெளி குறைகடத்தியான இச்சேர்மம் குறைக்கடத்தி கதிர்வீச்சு காணிகள், ஒளிவிலகல் கீற்றணிகள், மின் ஒளியியல் பண்பேற்றிகள், சூரிய மின்கலங்கள் மற்றும் டெராகெர்ட்சு கதிரியக்கம் உருவாக்குதல் மற்றும் இனங்காணுதல் உள்ளிட்ட பலவகையான பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. உலோகக் கலவையின் சேர்க்கையைப் பொறுத்து 1.4 முதல் 2.2 வரையிலான பட்டை இடைவெளி வேறுபாடுகளை இது வெளிப்படுத்துகிறது.
காட்மியம் துத்தநாக தெலூரைடை உபயோகிக்கும் கதிர்வீச்சு காணிகளை அறை வெப்பநிலையில் நேரடியாக மாற்றி இயக்க முடியும். ஆனால், குறிப்பாக செருமேனியம் போன்ற பொருட்களுக்கு திரவ நைட்ரசன் குளிர்விப்பு அவசியமாகிறது. இச்சிறப்பைத் தவிர எக்சு கதிர்கள் மற்றும் காமா கதிர்களுக்கு கூடுதல் உணர்திறண் காட்டுவது கூடுதல் சிறப்பாகும். காட்மியம் மற்றும் தெலூரியம் தனிமங்களின் அதிக அணு எண் மற்றும் அடர்வு காணிகளை விட சிறந்த ஆற்றல் முடிவு நுணுக்கங்களும் இச்சிறப்புக்கு காரணங்களாக இருக்கின்றன.[1] கதிர்வீச்சைக் கண்டுபிடிக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறான வடிவங்களில் காட்மியம் துத்தநாக தெலூரைடு கலவையைப் பயன்படுத்த முடியும். ஒருதள மின்கட்டமைப்புகள் போன்ற மின்முனை வடிவங்கள் மற்றும் சிறிய படப்புள்ளி காணிகள் ஆகியனவற்றிலும் ஒரு முனைவுள்ள இயக்கத்திற்காக உருவாக்கியும் ஆற்றல் முடிவு நுணுக்கங்களை மேம்படுத்தியும் இதைப் பயன்படுத்தமுடியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Small pixel CZT detector for hard X-ray spectroscopy". Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment.
- ↑ "Small pixel CZT detector for hard X-ray spectroscopy". Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment.
- Properties of Narrow-Gap Cadmium-Based Compounds Ed. P. Capper (INSPEC, IEE, London, UK, 1994) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85296-880-9