காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் பாண்டவேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் பாண்டவேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாண்டவேசுவரர். |
காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் (பாண்டவேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், (இச்சிவலிங்கம் தற்போது இல்லை; கட்டிடங்கள் கட்டும்போது இது காணாது போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.) இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]
இறைவர், வழிபட்டோர்
[தொகு]- இறைவர்: பாண்டவேஸ்வரர்.
- வழிபட்டோர்: பாண்டவர்கள்.
தல வரலாறு
[தொகு]பாண்டவர்கள், திரௌபதி, உரோமேசர் முனிவர் முதலிய முனிவர்களும் அவர்களின் மனைவியர்களும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குச் சிவலிங்கங்களை பிரதிட்டை செய்து வணங்கி வந்தனர். காஞ்சிக்கு வந்த அவர்கள் தத்தம் பெயர்களில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டனர். பாண்டவர்கள் பிரதிட்டை செய்து வழிபட்டது பாண்டவேசம் எனப்பட்டது.
பாண்டவேசம் எனப்படும் இச்சிவலிங்கத்திற்கு தென்திசையில் ஈசானன், கயிலாயநாதர் என்னும் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு வடகிழக்கு திசைக்கு திசைப் பாலகனாகும் பேற்றை அடைந்தான் என்பது வரலாறு[2]
அமைவிடம்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடகிழக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) ரயில்வே ரோடில் சென்று தோட்டப்பகுதியில், வெட்ட வெளியில் (தற்போது கட்டிடங்கள் நிறைந்துள்ளது) உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடகிழக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் (தற்போது இல்லை) அமைக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 52. பாண்டேவசப்படலம் 1747-1755
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | பாண்டவேசப் படலம 517
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (பாண்டவேசம்) பாண்டவேஸ்வரர்". Archived from the original on 2015-06-03. Retrieved 2016-03-05.