உள்ளடக்கத்துக்குச் செல்

தாமல் நரசிங்கேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் நரசிங்கேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் நரசிங்கேசம்.
அமைவிடம்
ஊர்:தாமல்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நரசிங்கேஸ்வரர்.

தாமல் நரசிங்கேசுவரர் கோயில் (நரசிங்கேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் எனும் கிராமத்திலுள்ள கோயில்களில் சிவன் கோயிலாகும். மேலும், திருமால் தனித்து தாபிக்கப்பட்டு வழிபட்ட இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்

[தொகு]
  • இறைவர்: நரசிங்கேஸ்வரர்.
  • வழிபட்டோர்: திருமால்.(நரசிம்ம அவதாரம்)

தல வரலாறு

[தொகு]

இரணியனை அழித்த நரசிம்மர் அவனின் ரத்தத்தைக் குடித்ததால் வெறிகொண்டு, உலகை துன்புறுத்தியது. அவ்வெறியை அடக்க இறைவன் சரபமாக வந்து நரசிம்மத்தை அழித்து அதன் தோலைப் போர்த்திக்கொண்டு காட்சி தந்தார். பின் திருமால் காஞ்சிக்கு வந்து நரசிங்கப்பெருமான் பெயரில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு இறைவனருள் பெற்றார் என்பது வரலாறாகும்.[2]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள "தாமல்" என்னும் கிராமத்தில் குளத்தின் வடமேற்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயிலை ஒரு கிலோமீட்டர் கடந்தால் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 38. நாரசிங்கேசப் படலம் 1304 - 1318
  2. tamilvu.org | காஞ்சிப் புராணம் | நாரசிங்கேசப் படலம் | பக்கம்: 396 - 400
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | நரசிங்கேசம்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.

புற இணைப்புகள்

[தொகு]