காசு பிரம்மானந்த ரெட்டி
காசு பிரமானந்த ரெட்டி | |
---|---|
3வது ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சா் | |
முன்னையவர் | நீலம் சஞ்சிவி ரெட்டி |
பின்னவர் | பி.வி.நரசிம்மராவ் |
தொகுதி | குண்டடூா் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28ஜலை 1909 ஆங்கில இந்தியா (இன்று இந்தியா) |
இறப்பு | 1994 (வயது 84ஆண்டுகள்) |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | காங்கிரஸ் (ஐ) |
வாழிடம் | இந்தியன் |
காசு பீிரமான்ந்த ரெட்டி (ஜூலை 28, 1909 – 20 மே 1994 இல் ஹைதராபாத்), இவா் இந்தியாவின், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, 29 பிப்ரவரி 1964 முதல் 30 செப்டம்பர் 1971 வரை இருந்தாா். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 3 ஜூன் 1977 இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]காசு பிரமானந்த ரெட்டி ஆந்திர பிரதேசம் குண்டூிர் மாவட்டத்திலுள்ள, .சிறுமமில்லா எனுமிடத்தில் பிறந்தாா். இவா் ஆரம்ப கல்வியை குண்டூரில் பயின்றாா். பட்டப்படிப்பை சென்னை மாநில கல்லூரியிலும் மற்றும் கேரளாவிலும் பயின்றாா். இவா் சட்டத்துறையில் நன்றாக பயிற்சி பெற்றததோடு, ஒரு மிக வெற்றிகரமான வழக்கறிஞராக செயல்பட்டாா்.
வாழ்க்கை
[தொகு]ரெட்டி ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்துறை உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார். இந்திரா காந்தியை இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேற்ற கூறிய காங்கிரஸ் தலைவர்களில் இவா் மட்டுமே ஆகும். இவரது ஏழு ஆண்டு (ஆந்திராவின் எந்தவொரு காங்கிரஸ் முதலமைச்சருக்கும் நீண்ட காலமாக) நீண்டகால ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. அதாவது, பிஹெச்இஎல், எச்.டீ.டீ., ஐடிபிஎல், ஹிந்துஸ்தான் கேபிள்கள் மற்றும் எம்ஐடிஹான்ஐ, பாரத் டைனமிக்ஸ் போன்ற பல பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. வடகிழக்கு ஆந்திர மாநிலத்தில் நக்சல் இயக்கத்தை அடக்குவதில் முதலமைச்சா் ஜலகம் வெங்கல் ராவ் காலகட்டத்தில், இவா் உள்துறை அமைச்சராக இருந்தார்.
ரெட்டி, தொலைத்தொடர்பு அமைச்சகம், நிதி மந்திரி, இந்திய உள்துறை அமைச்சர் (1974-1977) மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் (1988 பிப்ரவரி 1988 முதல் 18 ஜனவரி 1990 வரை) போன்ற முக்கிய பதவிகளில் வகித்தாா். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி இரண்டு தலைவர்களுள் இவரும் ஒருவா் ஆவாா்.
1969 ல் நடந்த தெலுங்கானா இயக்கத்தின் எழுச்சியின் போது, ஆந்திராவை இணைக்கும் முயற்சியில் ரெட்டி எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தாெலுங்கானா இயக்கத்தின் எழுச்சி 9 மாதங்கள் நடைபெற்றது.இதில் 370 இளைஞர்களும் மாணவர்களும் காவல்துறையின் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் 70,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 7,000 பெண்களும், மக்களும் 3,266 முறை குற்றம் சாட்டப்பட்டனர், சுமார் 20,000 பேர் காவல்துறையின் லத்தி மூலம் கயமடைந்தனர், 1840 பேர் அதிக காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. கண்ணீர்ப்புகை வாயு 1870 முறை மக்கள் மீது தாக்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் இந்த இயக்கத்தை காசு பிரம்மானந்த ரெட்டி அரசாங்கத்தால் முரட்டுத்தனமாகப் நசுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்திலுள்ள புகழ்பெற்ற சிரான் அரண்மனை தற்போது, ஜுபிளி மலை காசு பிரம்மணா ரெட்டி தேசிய பூங்கா என்ற பெயரிலே பெயரிடப்பட்டது.
சொந்த வாழ்க்கை
[தொகு]பிரம்மானந்த ரெட்டி மறைந்த என்.டி.ஆர் மற்றும் ஏ.ஆர்.ஆர் திரைப்படங்கள் குறிப்பாக கிருஷ்ணவாதாரம், புக்கிலாஸ், பாண்டவ வனவாசம், ஸ்ரீ கிருஷ்ண சத்யா, குண்டம்மா கதா, கன்னியுல்கம் ஆகியவற்றின் தீவிர ரசிகராக இருந்தாா். இவா் தனது இளமைக் காலத்தில் டென்னிஸ் மற்றும் ஹாக்கி விளையாடியுள்ளார். அவர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ரெட்டி தனது மனைவி காசு ராகவாமாவால் தப்பிப்பிழைக்கப்பட்டுள்ளார்; இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவரது மருமகன் காசு வெங்கட கிருஷ்ணா ரெட்டி (அவரது சகோதரர் காசு வெங்கல ரெட்டி மகன்) ஆந்திர பிரதேச அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராக இருந்தார்.
பாா்வை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஆந்திராவின் வரலாறு