உள்ளடக்கத்துக்குச் செல்

களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை
Kelani Valley Line
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்இலங்கை
முனையங்கள்
நிலையங்கள்25
சேவை
வகைபிராந்தியத் தொடருந்து சேவை
அமைப்புஇலங்கை தொடருந்து போக்குவரத்து
செய்குநர்(கள்)இலங்கை தொடருந்து போக்குவரத்து
பணிமனை(கள்)மருதானை
வரலாறு
திறக்கப்பட்டது1902 (குற்றகலப் பாதையாக)
மூடப்பட்டது1992 (பாதையை அகலமாக்கும் திட்டம் ஆரம்பம்)
மீண்டும் திறக்கப்பட்டது1996 (அகலப் பாதையாக)
தொழில்நுட்பம்
தட அளவி1,676 மிமீ (5 அடி 6 அங்)
வழி வரைபடம்
களனிவெளிப் பாதை
Unknown route-map component "exdKBHFa"
ஓப்பநாயக்க
Unknown route-map component "exdHST"
கட்டவத்தை
Unknown route-map component "exdHST"
வட்டப்போட்டை
Unknown route-map component "exdHST"
டெலா
Unknown route-map component "exdHST"
திருவானக்கெட்டி
Unknown route-map component "exdBHF"
இரத்தினபுரி
Unknown route-map component "exdHST"
குருவித்தை
Unknown route-map component "exdHST"
பரக்கடுவை
Unknown route-map component "exdHST"
எகலியகொடை
Unknown route-map component "exdHST"
கெட்டகெத்த
Unknown route-map component "exKHSTa" Unknown route-map component "exSTR"
எட்டியாந்தோட்டை
Unknown route-map component "exSTRl" Unknown route-map component "exABZg+r"
Unknown route-map component "KBHFxa"
அவிசாவளை
Stop on track
புவக்பிட்டி
Stop on track
கொஸ்கமை
Stop on track
கடுகொடை
Stop on track
வாகை
Stop on track
மொரக்கெலெ
Stop on track
கம்மானை
Stop on track
பின்னவலை
Stop on track
உக்கலை
Stop on track
அங்கம்பிட்டி
Stop on track
அருக்வதுப்புரம்
Stop on track
பாதுக்கை
Stop on track
வட்டரெக்கை
Stop on track
மீகொடை
Stop on track
கொடகமை
Stop on track
பனாகொடை
Stop on track
ஓமகமை
Stop on track
ஓமகமை மருத்துவமனை
Stop on track
மாலப்பல்லை
Stop on track
கொட்டாவை
Stop on track
பன்னிப்பிட்டி
Stop on track
மகரகமை
Stop on track
நாவின்னை
Stop on track
உதகமுல்லை
Stop on track
பெங்கிரிவத்தை
Stop on track
நுகேகொடை
Stop on track
கிரிலப்பனை
Stop on track
நாரகேன்பிட்டி
Stop on track
கொட்டா வீதி
Stop on track
பேஸ்லைன் வீதி
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZg+r"
பிரதான பாதை
Stop on track
மருதானை
Continuation forward
கொழும்பு நோக்கி

களனிப் பள்ளத்தாக்குத் தொடருந்துப் பாதை (Kelani Valley Railway Line, களனிவெளிப் புகையிரத சேவை) இலங்கையின் கொழும்பு மாவட்டத்தையும், கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளையும் இணைக்கும் தொடருந்துப் பாதை ஆகும். களனிவெளிப் பாதை முழுவதும் 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகலம் கொண்ட ஒற்றைப் பாதையாகும்.[1]

பாதை வழி[தொகு]

நுகேகொடை தொடருந்து நிலையம்

களனிவெளிப் பாதை கொழும்பு மருதானை தொடருந்து நிலையத்தில் இருந்து தென்கிழக்கு நோக்கிச் செல்கிறது. இது முக்கிய கொழும்பு புறநகர்களான நுகேகொடை, மகரகமை வழியாக சென்று கிழக்குப் பதிக்கு நகருகிறது. இது ஹோமகமையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைக் கடந்து அவிசாவளையைச் சென்றடைகிறது.

இப்பாதையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் கொழும்பு கோட்டை, மருதானை, நாரகேன்பிட்டி, நுகேகொடை, மகரகமை, பன்னிப்பிட்டி, கொட்டாவை, ஓமகமை, மீகொடை, பாதுக்கை, கொஸ்கமை, அவிசாவளை ஆகியனவாகும்.

வரலாறு[தொகு]

குற்றகலப் பாதை[தொகு]

களனிவெளிப் பாதை அடி 6 அங் (762 மிமீ) பெருந்தோட்டங்களின் தேவைகளுக்காக குற்றகலப் பாதைப் பணிகள் 1899 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1902 செப்டம்பர் 15 ஆம் நாள் கொழும்பில் இருந்து அவிசாவளை வரை சேவைக்கு விடப்பட்டது.[2] 1903 செப்டம்பர் 14 இல் எட்டியாந்தோட்டை வரை சேவை நீடிக்கப்பட்டது.[2][3] 1912 ஆம் ஆண்டில் இதன் கிளைப் பாதை ஒன்று அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி வரை 1912 சனவரி 15 இலும், பின்னர் டெலா வரை 1916 ஏப்ரல் 3 அன்றும், ஓப்பநாயக்க வரை 1919 மே 2 அன்றும் ஆரம்பிக்கப்பட்டது.[2] அவிசாவளை - எட்டியாந்தோட்டைப் பாதை 1942 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. ஓமகமை - ஓப்பநாயக்க பாதை 1973 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அவிசாவளை வரையான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

பாதை அகலப்படுத்தல்[தொகு]

1992-ஆம் ஆண்டில் குற்றகலப் பாதையை 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகலப் பாதையாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கபட்டது. 1996-ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து அவிசாவளை வரை 58 கிமீ தூரம் பாதை அகலப்படுத்தப்பட்டது. அவிசாவளைக்கு அப்பாலான பாதைகள் முற்றாக மூடப்பட்டன. அவிசாவளைக்கும் எட்டியாந்தோட்டை, மற்றும் ஒப்பநாயக்கா வரையுமான பாதைகளில் தற்போது பாழடைந்த தொடருந்து நிலையங்களும், பாலங்களுமே காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Island". Rampala regime in the local Railway History. 2010-07-19 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303194137/http://www.island.lk/2008/07/23/features5.html. 
  2. 2.0 2.1 2.2 "1931 FERGUSONS CEYLON DIRECTORY". சிலோன் ஒப்சர்வர். 1931. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. http://www.infolanka.com/org/mrail/slrails.html