உள்ளடக்கத்துக்குச் செல்

கறம்பக்குடி

ஆள்கூறுகள்: 10°27′30″N 79°08′24″E / 10.458440°N 79.140015°E / 10.458440; 79.140015
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரம்பக்குடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கறம்பக்குடி
கறம்பக்குடி
அமைவிடம்: கறம்பக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°27′30″N 79°08′24″E / 10.458440°N 79.140015°E / 10.458440; 79.140015
நாடு  இந்தியா
பகுதி சோழநாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் கறம்பக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் உ.முருகேசன்
மக்கள் தொகை

அடர்த்தி

14,626 (2011)

2,612/km2 (6,765/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.60 சதுர கிலோமீட்டர்கள் (2.16 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/karmabakkudy

கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இது டெல்டா பகுதியில் உட்பட்டதாகும்.

அமைவிடம்

[தொகு]

கறம்பக்குடி பேரூராட்சியானது, தஞ்சாவூர் 36 கிமீ , புதுக்கோட்டை 39 கிமீ , ஒரத்தநாடு 25 கிமீ ,பட்டுக்கோட்டை 25 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

5.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 49 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரவல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3352 வீடுகளும், 14626 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°28′N 79°08′E / 10.47°N 79.13°E / 10.47; 79.13 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பள்ளிகள்

[தொகு]
  1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுமார் கோவில்
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (செங்கமலம்)
  3. TELC (அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளி
  4. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  5. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
  6. ரீனா மெர்சி ஆங்கிலப்பள்ளி
  7. குத்தூஸ் ஆங்கிலப்பள்ளி
  8. மகாத்மா காந்தி ஆங்கிலப்பள்ளி
  9. ப்ரைட் ஆங்கிலப்பள்ளி

வழிபாட்டு தலங்கள்

[தொகு]
  1. அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் சிவன் திருக்கோயில்
  2. அருள்மிகு முத்துக்கருப்பையா கோயில்
  3. அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பையா கோயில் (சின்னக்கருப்பர் கோயில்)
  4. அருள்மிகு ஐயப்பன் கோயில்
  5. அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் (அக்ராஹாரம்)
  6. அருள்மிகு சந்தான ஆஞ்சநேய சுவாமி கோயில் (அக்ராஹாரம்)
  7. அருள்மிகு முருகன் கோயில் (புதுக்கோட்டை ரோடு)
  8. அருள்மிகு மங்கள விநாயகர் கோயில் (வள்ளுவர் திடல்)
  9. அருள்மிகு முனியாண்டவர் கோயில் (காவல் நிலையம்)
  10. அருள்மிகு மாரியம்மன் கோவில் (கண்டியன் தெரு)
  11. அருள்மிகு விநாயகர் கோயில் (செட்டி தெரு)
  12. திருமணஞ்சேரி அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்
  13. ஜும்மா மசூதி (பெரிய பள்ளிவாசல்)
  14. மார்க்கெட் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  15. மஸ்ஜிதே ஹலிமா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  16. அத்தயைபா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  17. மேலப் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
  18. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
  19. அசெம்ப்ளீஸ் ஆப் காட் திருச்சபை
  20. கத்தோலிக்க திருச்சபை
  21. அருள்மிகு வீரமாகாளியம்மன் (அம்புக்கோவில்)
  22. அருள்மிகு காளியம்மன் கோவில் (அம்புக்கோவில்)
  23. அருள்மிகு மளையத்தம்மன் (அம்புக்கோவில்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. கறம்பக்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Karambakkudi Population Census 2011
  6. "Karambakkudi Town Panchayat". Archived from the original on 2021-01-17. Retrieved 2020-04-24.
  7. "Karambakkudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறம்பக்குடி&oldid=4149227" இலிருந்து மீள்விக்கப்பட்டது