உள்ளடக்கத்துக்குச் செல்

குன்றாண்டார்கோயில் குகைக்கோவில்

ஆள்கூறுகள்: 10°34′56″N 78°53′50″E / 10.58222°N 78.89722°E / 10.58222; 78.89722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்றாண்டார் குடைவரைக் கோயில்
குன்றாண்டார் குடைவரைக் கோயில் is located in தமிழ் நாடு
குன்றாண்டார் குடைவரைக் கோயில்
குன்றாண்டார் குடைவரைக் கோயில்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவு:குன்றாண்டார்கோயில்
ஏற்றம்:127 m (417 அடி)
ஆள்கூறுகள்:10°34′56″N 78°53′50″E / 10.58222°N 78.89722°E / 10.58222; 78.89722
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:குடைவரை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:எட்டாம் நூற்றாண்டு 

குன்றாண்டார் குடைவரைக் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை நகரத்திற்கு வடகிழக்கில் 36.2 கிலோ மீட்டர் தொலவில் உள்ளது. இது பல்லவ மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். இது எட்டாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் நீட்டிக்கப்பட்ட கட்டிடப்பகுதியானது சாளுக்கிய சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசினால்  கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை பிற்கால பல்லவர் மற்றும்  சோழர்  கலைப்பாணியில் உள்ளது. இங்கு பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், மற்றும் விஜயாலய பேரரசின் கல்வெட்டுகளை கொண்டிருக்கும் ஒரு கற்கோயிலாக உள்ளது.

தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 127 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°34'55.5"N, 78°53'51.7"E (அதாவது, 10.582087°N, 78.897687°E) ஆகும்.

வரலாறு 

[தொகு]

குன்றாண்டார்கோயில் என்பது குன்று -ஆண்டான்-கோயில் என்கிற பொருள்படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பகுதியை ஏழாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை பல்லவர்களின் கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதன் பிறகு பிற்கால சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது. 

குடைவறை கோவிலானது இரண்டாம் நந்தி வர்மன் பல்லவனின் (கி.பி.710 - 775) துணை ஆட்சியாளராக விளங்கிய முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.

நந்திவர்மன் மற்றும் அவரது மகன் தந்திவர்மன் காலத்தைய முற்கால கல்வெட்டுகள் திருவாதிரை வழிபாட்டு நிகழ்வுக்கு கொடை வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது. சௌந்தர ராஜன் என்பவர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உரைக்கிறார். இது தவிர்த்த ஏனைய கல்வெட்டு பொறிப்புகள் சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசை சார்ந்தவையாக உள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் கிராமமானது கள்ளர் சமூகத்தினரால் இரு பகுதியாக பிரிக்கப்பட்டது இங்குள்ள கல்வெட்டுகளில் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், வரி வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளன[1]

இக்கோவில் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[2]

கட்டுமான நுட்பம்

[தொகு]
நூற்றுக்கால் மண்டபம்

தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் குன்றாண்டார்கோயில் ஒரு பாறையில் அமைந்த குடைவறை கோவிலாகும் அது மட்டுமின்றி குடைவறையில் மாறுபட்ட நிலைகளில் சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.[3] லிங்க வடிவிலான மூலவர் கிழக்கு நோக்கிய திருகுன்றக்குடி ஈசனை பர்வதகிரீசுவரராக வழிபடுகின்றனர். கருவறையும் அர்த்த மண்டபமும் எவ்வித வேலைப்பாடுகளுமின்றி உள்ளன. அறையை கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன. மூலவரின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு சிலை முத்தரையர் என்றும் ஏனையது அவரது உதவியாளர் எனவும் கருதப்படுகிறது.

முக்கியத்துவம்

[தொகு]

குடைவறை கட்டிடக்கலைக்கான சோழர் கலைப்பாணி மற்றும் பல்லவ கட்டிடக்கலைக்கான உதாரணமாகும். இங்கு உள்ள சிவன், பார்வதி மற்றும் சேயோன் முருகனோடு காட்சிதரும் மிக முக்கியமான இளமுருகன் வெண்கலச்சிலை  மண்டபத்தின் மத்தியில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது[4]

மேற்கோள்கள் 

[தொகு]
  1. Epigraphical Society of India (2003). Studies in Indian Epigraphy, Volume 29. Geetha Book House. p. 58.
  2. "Alphabetical List of Monuments - Tamil Nadu". Archaeological Survey of India. 2011. Retrieved 14 November 2015.
  3. Bradnock, Robert; Bradnock, Roma (2000). India Handbook. Trade & Travel Publications. p. 821. ISBN 978-1-900949-81-1. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  4. Rao, A.V.Shankaranarayana (2012). Temples of Tamil Nadu. Vasan Publications. pp. 152–53. ISBN 978-81-8468-112-3. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)