உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபிலர்மலை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. உமா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

வி. எஸ். மாதேசுவரன்

சட்டமன்றத் தொகுதி பரமத்தி-வேலூர்
சட்டமன்ற உறுப்பினர்

எச். சேகர் (அதிமுக)

மக்கள் தொகை 60,791
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பரமத்தி-வேலூர் வட்டத்தில் உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், கபிலர்மலையில் இயங்குகிறது.

2008ல் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, பரமத்தி வேலூர் புதிய சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் சுற்றுலா தலமான ஜேடர்பாளையம், கபிலர்மலை அருகில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 60,791 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,585 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 29 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

[தொகு]

கபிலர்மலையில் புகழ்பெற்ற கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல் கோவில் உள்ளது.[5] கபிலர்மலையில் தை பூசத் தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வேளாண்மை முக்கிய தொழில். பல சிற்றூர்களைத் தன்னுள் கொண்டுள்ள ஊர். கோவிலில் பாலசுப்ரமணியர் - முருகன் மையக் கடவுள். மலை உச்சியில் பிள்ளையார் உள்ளது. மலையில் வற்றாத சுனை நீர் உள்ளது. இந்த மலையில் ஒரு சில அரிய மூலிகை உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் கட்டியவர் பற்றியும் அதன் வருடம் பற்றி சரியான தகவல் தெரியவில்லை. மலையில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலின் உள்ளே அழகான சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி (1909-) நூற்றாண்டு கடந்து நிற்கிறது இதன் சிறப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Census of Namakkal district 2011
  4. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  5. "Kapilarmalai". Retrieved 21 அக்டோபர் 2016.