கடக ரேகை
கடக ரேகை, (Tropic of Cancer) அல்லது கடக வரை என்பது வடக்குத் திசையின் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாள் அல்லது தெற்கின் குளிர்காலக் கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாளன்று சூரியத் தடவழியின் வடவெல்லையை - "நில நடுக்கோடு என்று காணப்படுவதைக்- குறிப்பிடும் வகையிலான ஒரு நில அகலாங்கு வட்டம் ஆகும்.
வடக்கு வெப்ப மண்டலப் பகுதி என்றும் இதனை அழைக்கின்றனர். இது, பருவ நிலை மாற்றங்களோடு மாறுவதாக, வானத்திற்குக் குறுக்கான சூரியத் தடவழியின் துருவங்களைக் குறிக்கும் (மகரக் கோட்டுடன் சேர்த்து) இரண்டு வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும்.
சூரியனைச் சுற்றி வரும் தனது பாதையின் பரப்புக்குச் சிறிது சாய்மானமான நிலையில், புவியின் சுற்றச்சு சற்றே சாய்ந்திருக்கும் காரணத்தினால் வேனிற் காலத்தின் முதல் நாள் வட கோளத்தில் கடக வரைக்கு நேர் மேலாக சூரியன் வருகிறது. இது தொடுவானத்திற்கு மேல் தனது உச்சத்தில் சூரியன் 90° கோண அளவையை அடைகிற வடவெல்லையின் நில அகலாங்கு ஆகும்.[1] இதனுடன் வடகோளம் சூரியனை நோக்கி தனது அதிகமான அளவில் சாய்மானம் கொண்டுள்ளது.
இந்த வெப்ப மண்டலங்களை முதன்மை ஐந்து கோண அளவீடுகளில் இரண்டு எனவோ அல்லது ஆர்க்டிக், அண்டார்க்டிக் அகலாங்குகளையும் நில நடுக்கோடு (புவி நடுவரை) ஆகியவற்றோடு சேர்த்து புவியின் வரைபடத்தைக் குறிக்கும் அகலாங்குகளின் வட்டங்கள் எனவோ கொள்ளலாம்.
இடப்பெயர்ச்சி
[தொகு]கடக வரையின் இருப்பு, புவி சூரியனைச் சுற்றிவரும் பவி நடுவரைத் தளத்தில் நிகழும் புவி நெட்டாங்கின் திசைவைப்பு அலைவால் தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது. புவியின் அச்சுச் சாய்வு கடந்த 41,000 ஆண்டுகளில் 22.1 இல் இருந்து 24.5 பாகைவரை மாறியுள்ளது. இது as of 2000[update] ஆண்டளவில் 23.4 பாகைகளாகும். இது அடுத்த ஓராயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே அமையும். இந்த அலைவால் கடக வரை ஆண்டுக்கு அகலாங்கின் அரை வட்டவில்நொடிகள் அளவுக்கு, அதாவது 5 மீ அளவுக்குத் தெற்காக இடம்பெயர்கிறது. இந்த அகலாங்கு வட்ட இருப்பு 1917 ஆம் ஆண்டில் சரிய்யக 23° 27′ வடக்கில் இருந்தது; இது 2045 ஆம் ஆண்டில் 23° 26' வடக்கில் இருக்கும்.[2] அந்தாட்டிக வட்டத்துக்கும் கடக வரைக்கும் உள்ள தொலைவு மாறுவதில்லை. ஏனெனில் இரண்டு அகலாங்குகளுமே ஒரே அளவில் இடம்பெயர்கின்றன. இந்தக் கற்பிதம் நிலையான புவி நடுவரையைச் சார்ந்து கூறப்படுகிறது: ஆனால் உண்மையான புவி நடுவரை நிலையாக இருப்பதில்லை. கூடுதல் தகவல்களுக்குக் காண்க, புவி நடுவரை, அச்சுச் சாய்வு அகலாங்கு வட்டம்#கடக வரை, புவிமுனை அகலாங்கு வட்டங்களின் நகர்வு.
புவியியல்
[தொகு]தற்போது கடக வரை நில நடுக்கோடுக்கு வடக்கே 23° 26′ 22″ என்ற அலகில் உள்ளது. இந்த நில அகலாங்கிற்கு வடக்கில் துணை வெப்பமண்டலமும் வடக்கு மித வெப்ப மண்டலமும் உள்ளன. நில நடுக்கோடுக்கு தெற்குப் புறமாக, இதற்கு ஈடாக உள்ள நில அகலாங்கு மகர வரையாகும். இவை இரண்டிற்கும் இடையில், புவி நடுவரையில் மையம் கொண்டுள்ள பகுதிகள் வட, தென் வெப்ப மண்டலங்களாகும்.
புவியில் 2000 ஆம் ஆண்டளவில் உலக மக்கல்தொகையில் பாதிக்கும் மேலாக வாழ்கின்றனர்.[3]
கோடை சமப் பகலிரவு நாளில் கடக வரையின் பகல் நேரம் ழ்13 மணி, 35 மணித்துளியாக அமைகிறது. குளிர்காலச் சமப் பகலிரவு நாளில் இதன் பகல் நேரம் 10 மணி, 41 மணித்துளி ஆக அமைகிறது.
முதன்மை நெட்டாங்கில் தொடங்கி கிழக்குப் புறமாகச் செல்லும் கடக வரை பிவ்ருவனவற்றின் வழியே செல்கிறது:
பெயர்
[தொகு]இந்த கற்பனை வரையினைக் கடக வரை என்றழைக்கின்றனர். காரணம், இதற்குப் பெயர் சூட்டிய வேளையில் சூரியன், ஜூன் மாதக் கதிர்த் திருப்பம் கொண்டு (நண்டு என்பதற்கான இலத்தீன் சொல்லான) கான்சர் என்னும் கடக விண்மீன் கூட்டத்தை நோக்கியிருந்தது. இருப்பினும், சம இராப்பகல் நாட்களின் முந்துநிலையின் விளைவாக, இது தற்சமயம் உண்மையான நிலையாக இல்லை. பன்னாட்டு வானவியல் கூட்டமைப்பு அறிவித்துள்ள எல்லைகளின்படி சூரியன் தற்போது ஜூன் கதிர்த் திருப்பத்தில் மேழத்தில் அமைந்துள்ளது. ஓரை வட்டத்தினைப் பன்னிரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தும் விண்மீன்சார் வானவியல் கூற்றுப்படி, சூரியன் அந்தச் சமயத்தில் மிதுனத்தில் இருந்தது. "வெப்ப மண்டலம்" எனப் பொருள்படும் டிராப்பிகல் என்னும் சொல்லே, திருப்புதல், என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான டிராப்போஸ் என்பதிலிருந்து வந்ததாகும். இது சூரியன் கதிர்த் திருப்பங்களிலிருந்து திரும்புகிற உண்மையைக் குறிப்பதாக அமைந்தது.
காலநிலை
[தொகு]வடத் திருப்பப்புள்ளியில் காலநிலை, சீன உயர்நிலச் சமவெளியின் குளிரானப் பகுதி, அவாய் நெய்தற்சூழல்,கிழகத்தியக் கடற்கரை ஆகிய ஆண்டுக்கு 4 மீ உயர்மழை பொழியும் பகுதிகள் ஆகியவற்றைத் தவிர வெப்பமான உலர்ந்த பகுதியாகவே அமைகிறது. இந்த வட வெப்ப மண்டலம் இருவேறு பருவங்களைச் சந்திக்கிறது: வெப்பநிலை 45 செ அளவுக்கு உயரும் மீவெப்பக் கோடை, பேரளவு வெப்பநிலையாக 22 செ நிலவுவு மிதவெப்பக் குளிர்காலம். இந்த வெப்ப மண்டலப் பகுதியிலும் அதற்கு அருகிலும் சகாரா பாலைநிலமும் அதேவேளையில் கிழக்கே, சூன் முதல் செபுதம்பர் வரை பருவம் கொந்தளிப்பான பருவமழையும் ஆண்டின் பிற காலத்தில் மிகக் குறைவான மழையும் அமைகின்றன.
இந்த வட வெப்ப மண்டலப் பகுதியிலும் அண்மையிலும் உயரமான மலை தாய்வானில் உள்ள யூ சான் ஆகும். கடந்த பெருமப் பனியூழி காலத்தில் இம்மண்டலத்தில் 2800 மீ அளவு தாழ் உயரத்திலேயே அங்கிருந்து பனியாறுகள் கீழிறங்கின. அண்மையில் இன்னும் பனியாறுகள் இம்மண்டலத்தின் 470 கிமீ உயர அளவு அருகாமை சுற்றி அமைந்துள்ளன. இதற்கு மிக அருகாமையில் இமயமலையின் வடக்கே மின்யோங், பைசுயி பணியாறுகள் நிலவுகின்றன;[4] மெக்சிகோவுக்குத் தெற்கே சுதாச்சிகுவாட் பனியாறு அமைந்துள்ளது.
சுற்றிச் செலுத்துதல்
[தொகு]பன்னாட்டு வானூர்தியியல் பேரவை அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, உலகைச் சுற்றிப் பறக்கும் வேகப் பதிவை நிறைவு செய்வதற்கு, ஒரு விமானம் கடக வரையின் நீளத்திற்குக் குறையாத அளவந்தொலைவு உயரத்தில் பறந்திருக்க வேண்டும். மேலும் அது நெட்டாங்குகள் அனைத்தையும் கடக்க வேண்டும். மேலும் தான் பறக்கத் தொடங்கிய விமானத் திடலிலேயே பயணத்தை முடிக்கவும் வேண்டும். இந்த நீளம் 36,787.559 கிலோ மீட்டர்களாகும்.[5] மேற்காணும் கடக வரையின் மாறுபாடுகளைக் கருத்தில் கொள்கையில், இந்த எண் உறுதியற்றதொரு துல்லிய அளவைக் குறிப்பிடுவதாகவே உள்ளது.
வழமையான முறையில் சுற்றிச் செலுத்தும் செயற்பாட்டிற்கான விதிகளைச் சற்றே தளர்த்தி, தொலைவு என்பது குறைந்தது, 37,000 கிலோ மீட்டர்களாக முழுமையாகியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Obliquity of the Ecliptic and Arctic Circle Calculator". பார்க்கப்பட்ட நாள் September 20, 2022.
- ↑ Montana State University: Milankovitch Cycles & Glaciation பரணிடப்பட்டது ஆகத்து 6, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Quigley, Robert (12 August 2010). "The World's Population Mapped by Latitude and Longitude". The Mary Sue. பார்க்கப்பட்ட நாள் 11 January 2021.
- ↑ within 470 கிலோமீட்டர்கள் (290 mi)
- ↑ Bakker et al., Radio Positioning at Sea: Geodetic Survey Computations Least Squares Adjustment, 1995 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6275-537-2)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஓமன் நாட்டில் கடக ரேகை என்பதன் மீதான கட்டுரை பரணிடப்பட்டது 2012-01-28 at the வந்தவழி இயந்திரம்