கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில்
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°06′57″N 79°42′26″E / 11.115856°N 79.707249°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவிடம்: | கஞ்சாநகரம் |
சட்டமன்றத் தொகுதி: | பூம்புகார் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
ஏற்றம்: | 23.13 m (76 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காத்ர சுந்தரேசுவரர் |
தாயார்: | துங்கபாலஸ்தானாம்பிகை |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
காத்ர சுந்தரேசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் (முன்னர் நாகப்பட்டினம் மாவட்டம்) கஞ்சாநகரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் 'கார்த்திகா சுந்தரேசுவரர் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.[1] அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் பிறந்து முக்தி அடைந்த திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது.[2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.13 மீட்டர்கள் (75.9 அடி) உயரத்தில், (11°06′57″N 79°42′26″E / 11.115856°N 79.707249°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
முக்கியத்துவம்
[தொகு]கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபட்டு பரிகாரம் செய்து கொள்ளும் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.[3]
இதர தெய்வங்கள்
[தொகு]துர்க்கை, சண்டிகேசுவரர், பிரம்மா, மேதா தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், செல்வ விநாயகர், சுப்பிரமணியர், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலின் மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கஞ்சாநகரம் கார்த்திகா சுந்தரேஸ்வரர்". temple.dinamalar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ ValaiTamil. "Temples and other spritual places are organized in valaitamil.com". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ "கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
- ↑ "Kathra Sundareswarar Temple : Kathra Sundareswarar Kathra Sundareswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.