எஸ். ஏ. சந்திரசேகர்
Appearance
எஸ். ஏ. சந்திரசேகர் | |
---|---|
பிறப்பு | 1945 முத்துப்பேட்டை, தங்கச்சிமடம், ராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1965–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சோபா |
பிள்ளைகள் | விஜய் |
எஸ். ஏ. சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 இல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் சமூகப் பின்னணியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]- சந்திரசேகர் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகில் முத்துப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். அப்பா பெயர் சேனாதிபதிபிள்ளை அவர்களின் ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ரயில்வே பணிபுரிந்தார். ஒரு வசதி வாய்ந்த கிறித்தவ வேளாளர் பிள்ளை குடும்பத்தில் பிறந்தார்.
- இவர் பின்னாளில் கர்நாடக இசைப் பாடகியான சோபாவை மணமுடித்துள்ளார்.[3]
- இவர் கோலிவுட்டின் தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் தந்தையாவார்.[4]
- இவர் தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜயை ஒரு முழுமையான கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
- இவருக்கு நடிகர் விஜய்க்கு பிறகு இரண்டாவதாக வித்யா என்ற மகள் 2 வயதிலேயே உயிரிழந்தார்.[5]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]- சந்திரசேகர் அரசாங்க தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று சென்னையில் அரசாங்க வேலையில் சேர்ந்தார்.
- அவருக்கு திரைத்துறையில் தனது பங்களிப்பை செலுத்தும் விதமாக விஜயா வாஹினி ஸ்டூடியோவில் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த எங்க வீட்டு பிள்ளை திரைபடத்தின் மூலம் சவுண்ட் இன்ஜினியராக தனது திரை வாழ்வை ஆரம்பித்தார்.
- அதன் பிறகு இயக்குனர் டி. என். பாலுவிடம் உதவி இயக்குனராக அவரது படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்.
- எங்க வீட்டு பிள்ளை, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, அஞ்சல் பெட்டி 520, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, திருமாங்கல்யம், உத்தமன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்
- அதன் பிறகு 1980கள் முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
- இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
- சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும்.
- இதைவிட 1980களில் இயக்குனர் சந்திரசேகர்–மு. கருணாநிதி கதை, வசனத்தில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
- மேலும் 80களில் இயக்குனர் சந்திரசேகர்–விஜயகாந்த் இணையில் பல அரசியல் கருத்து தெறிக்கு திரைப்படங்கள் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றள்ளது.
- பின்பு விஜயகாந்த் அவர்களை வைத்து அதிகமான திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
- அதே சமயத்தில் ரஜினிகாந்தை வைத்து நான் சிவப்பு மனிதன் என்ற ஒரே திரைப்படத்தை மட்டுமே இயக்கினார்.
- மேலும் இவர் இயக்கிய திரைப்படங்களில் இவர் சிறப்பு கௌரவ தோற்றங்களிலும் நடித்துள்ளார்.[6]
- மேலும் 90களின் பெரும் இயக்குனர்களான எஸ். சங்கர், ஏ. வெங்கடேஷ் எம். ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.[7][8]
- மேலும் இவர் இயக்கிய டூரிங் டாக்கிஸ் (2015)[9] திரைப்படம் சந்திரசேகர் இயக்கிய 69 ஆவது படமாகும்
திரைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.filmibeat.com/celebs/s-a-chandrasekhar/biography.html
- ↑ http://www.thehindu.com/thehindu/mp/2005/03/21/stories/2005032101490100.h
- ↑ http://profiles.lakshmansruthi.com/index.php?uid=684
- ↑ http://www.filmibeat.com/celebs/vijay-tamil-actor/biography.html
- ↑ https://in.movies.yahoo.com/post/122230622292/birthday-special-5-facts-about-vijay-you-must
- ↑ SAC breaks silence on proxy direction – IBNLive பரணிடப்பட்டது 2015-04-13 at Archive.today. Ibnlive.in.com (2012-06-07). Retrieved on 2015-10-16.
- ↑ http://articles.economictimes.indiatimes.com/2010-10-03/news/27570278_1_tamil-film-first-film-robot
- ↑ http://www.thehindu.com/features/metroplus/master-of-bromance/article5171133.ece
- ↑ 'Touring Talkies' film with Amitabh … Thanu produced Director SAC! ~ Amigos Crowd பரணிடப்பட்டது 2015-04-13 at the வந்தவழி இயந்திரம். Amigoscrowd.com (2015-01-27). Retrieved on 2015-10-16.