எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி
எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி | |
கல்லூரி நிர்வாகக் கட்டிடம் | |
குறிக்கோளுரை | ஒழுக்கம், கடின உழைப்பு, வெற்றி மாணவர்களின் வெற்றியே நமது வெற்றி |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2000 |
தலைவர் | திரு எம் குமாரசாமி |
கல்வி பணியாளர் | 450+ |
நிருவாகப் பணியாளர் | 100 |
மாணவர்கள் | 4000+ |
அமைவிடம் | , , 11°03′18″N 78°02′53″E / 11.054935°N 78.048076°E |
வளாகம் | புறநகர், 50 ஏக்கர்கள் (200,000 m2) |
விளையாட்டுகள் | கூடைப்பந்து, கால்பந்து, துடுப்பாட்டம், டென்னிஸ் |
சுருக்கப் பெயர் | mkce |
இணையதளம் | mkce.ac.in |
எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி (M. Kumarasamy College of Engineering) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம், தலவபாளையத்தில் கரூர் - சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.[1] இப்பொறியியல் கல்லூரியை எம். குமரசாமி உடல்நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான எம். குமாரசாமி 2001 ஆம் ஆண்டில் நிறுவினார். கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டள்ளது.[2].
வரலாறு
[தொகு]எம். குமாரசாமி உடல்நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தன்னாட்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள்
[தொகு]மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள் ஒவ்வொரு துறையாலும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள் வழக்கமான கல்லூரி நேரத்திற்குப் பிறகு நடத்தப்படுகின்றன.
நூலகம்
[தொகு]கல்லூரியில் 2000 ஆம் ஆண்டு நூலகம் தனது சேவையைத் தொடங்கியது. முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட நூலகத் தகவல் அமைப்புகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்றாடச் செயல்பாடுகளில் பெரிதும் உதவுகின்றன.
பட்டைக்குறி வருடும் வசதியுடன் மென்பொருள் அமைப்பும் நூலகத்தில் பயன்படுத்துகிறது. நூலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆவணமும் அதன் புழக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் பட்டைக் குறியீடு குறிச்சொல்லைக் கொண்டுள்ளது. நூலகத்தின் உள்ளடக்கம்:
- மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை :33,000
- தலைப்புகளின் மொத்த எண்ணிக்கை :16,297
- புத்தகம் அல்லாத பொருட்கள் :2750
- பத்திரிகைகளின் மொத்த எண்ணிக்கை :22
படிப்புகள்
[தொகு]எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3]:
இளநிலைப் படிப்புகள்
[தொகு]- பி.இ.- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ.- மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ.- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ.- மின்னணு மற்றும் கருவிப் பொறியியல்
- பி.டெக்.- தகவல் தொழில்நுட்பம்
- பி.இ.- இயந்திரப் பொறியியல்
- பி.இ.- குடிமைசார் பொறியியல்.
முதுநிலைப் படிப்புகள்
[தொகு]- எம்.பி.ஏ.
- எம்.சி.ஏ.- கணினி செயலி
- எம்.இ. சி.எஸ்.இ.
- எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று
- எம்.இ.- எம்.எப்.இ.
- எம்.இ. ஆற்றல் அமைப்பு
- எம்.இ. தொடர்பு அமைப்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/karur-news-awarded-to-mkumarasamy-college-of-engineering-488031?infinitescroll=1. பார்த்த நாள்: 25 December 2023.
- ↑ https://www.mkce.ac.in/
- ↑ https://www.careers360.com/colleges/m-kumarasamy-college-of-engineering-karur/courses