உள்ளடக்கத்துக்குச் செல்

என். எஸ். இராசாராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவரத்னா சீனிவாச ராஜாராம் (Navaratna Srinivasa Rajaram) (22 செப்டம்பர் 1943 - 11திசம்பர் 2019) இவர் ஓர் இந்திய கல்வியாளரும், ஓர் இந்துத்துவ சித்தாந்தவாதியுமாவார். இவர், வாய்ஸ் ஆப் இந்தியா பதிப்பகத்தின் வெளியீடுகளால் குறிப்பிடத்தக்கவர். "சுதேசிய ஆரியர்கள்" கருதுகோளை முன்வைத்து, வேதகாலம் ஒரு விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து மிகவும் முன்னேறியது என்று வலியுறுத்தினார். அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட சிந்துவெளி வரிவடித்தை புரிந்துகொண்டதாகவும் ராஜாராம் கூறினார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் 22 செப்டம்பர் 1943 அன்று மைசூரில் ஒரு தேசஸ்த் மத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா நவரத்ன இராமராவ் ஒரு காலனித்துவ அறிஞரும் பிராந்திய புகழின் வடமொழி எழுத்தாளருமாவார். [2]

இவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார் . கென்ட் மாநிலப் பல்கலைக்கழகம், அமெரிக்க விண்வெளி நிறுவனமான<i>லாக்ஹீட் கார்ப்பரேஷன்</i> ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்பித்தார். [3] இவர் இந்தியாவில் ஒரு பொறியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் 11 திசம்பர் 2019 அன்று இறந்தார். [3]

இந்தியவியல்

[தொகு]

பண்டைய இந்திய வரலாறு மற்றும் இந்திய தொல்லியல் தொடர்பான தலைப்புகளில் இவர் விரிவாக வெளியிட்டார், இந்தியவியல் மற்றும் சமசுகிருத வியாகரணத்தில் ஐரோப்பிய மையவாதம் சார்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார், அதற்கு பதிலாக " சுதேசிய ஆரியர்கள் " கோட்பாட்டின் எல்லைக்குள் வாதிட்டார். [4]

நூலியல்

[தொகு]
  • Rajaram, N S (2019). The Vanished Raj A Memoir of Princely India. Prism Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789388478113.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chadha, Ashish (April 2010). "Cryptographic imagination: Indus script and the project of scientific decipherment". The Indian Economic & Social History Review 47 (2): 141–177. doi:10.1177/001946461004700201. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-4646. 
  2. Rajaram 2019, ப. 300.
  3. 3.0 3.1 "Obit: Dr N S Rajaram, A Pioneer And A Martyr To The Cause Of A Hindutva Narrative". swarajyamag.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  4. Chadha, Ashish (February 2011). "Conjuring a river, imagining civilisation: Saraswati, archaeology and science in India" (in en). Contributions to Indian Sociology 45 (1): 55–83. doi:10.1177/006996671004500103. பன்னாட்டுத் தர தொடர் எண்:0069-9667. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._இராசாராம்&oldid=4118439" இலிருந்து மீள்விக்கப்பட்டது