என்றி கர்னி பள்ளி
என்றி கர்னி பள்ளிகள் (ஆங்கிலம்: Henry Gurney Schools; மலாய்: Sekolah Henry Gurney) என்பது மலேசியாவில் இளம் குற்றவாளிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சீர்த்திருத்தப் பள்ளிகள் ஆகும். மலேசியாவில் ஐந்து இடங்களில் இந்தப் பள்ளிகள் (மையங்கள்) உள்ளன.[1]
இந்த மையங்கள் சிறார் நீதிமன்றங்கள் சட்டம் 1947 [சட்டம் 90] (Juvenile Courts Act 1947 [Act 90]) கீழ் 1949-இல் நிறுவப்பட்டன. 15 மே 1950-க்கு முன்னர், இந்தப் பள்ளிகள் உயர் ஒழுக்கப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.[1]
பொது
[தொகு]இந்தப் பள்ளி 1949-இல் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. சிறார் ஆண்களுக்காக நிறுவப்பட்ட இந்தப் பள்ளி அதன் பெயரில் 3 முறை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. 1949-இல் உயர் ஒழுக்கப்பள்ளி என்ற பெயரில் தொடங்கியது. 1950-இல் இளைஞர் பயிற்சிப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மூன்றாவதாக 15 மே 1950-இல் என்றி கர்னி பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டது.
என்றி கர்னி
[தொகு]சர் என்றி கர்னி (Sir Henry Lovell Goldsworthy Gurney) மலாயா கம்யூனிச சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் ஆவார். அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயா கம்யூனிச ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர்.[2][3]
ஆனால், இறுதியில் கம்யூனிச ஆதரவாளர்களால் 1951-ஆம் ஆண்டு பிரேசர் மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சர் என்றி கர்னியின் கல்லறை கோலாலம்பூர் செராஸ் சாலையில் உள்ளது.[4]
என்றி கர்னி பள்ளிகள்
[தொகு]- என்றி கர்னி பள்ளி, பத்து காஜா, பேராக் (பெண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி, தெலுக் மாஸ், மலாக்கா (இணை கல்வி)
- என்றி கர்னி பள்ளி, கோத்தா கினபாலு, சபா (பெண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி புஞ்சாக் போர்னியோ, கூச்சிங், சரவாக் (ஆண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி, கெனிங்காவு, சபா (ஆண்களுக்கான பள்ளி)
திட்டங்கள்
[தொகு]இந்த மையங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- அறிமுகத் திட்டம்
- புத்தொளி பயிற்சி
- நோக்குநிலை
- மதிப்பீடு
- சுய ஆளுமைத் திட்டம்
- ஆன்மீகத் தொகுதி
- கல்வித் தொகுதி
- ஆலோசனை தொகுதி
- விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொகுதி
- தொழில் பயிற்சி
- தையல்
- கைவினை
- பத்தீக் துணி நெய்தல்
- சமையல்
- வெளியாவதற்கு முன்னர் தயார்படுத்துதல்
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Sekolah Henry Gurney - As an institution established specifically to improve morals". www.prison.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
- ↑ Text of telegram from Sir M.V.del Tufo,Chief Secretary,Federation of Malaya Govt. to Mr.Griffiths,Secretary of State for the Colonies. accessed 4 November 2013]
- ↑ "Guerrillas Murder High Commissioner In Malaya.". The Canberra Times (ACT : 1926 - 1995) (ACT: National Library of Australia): p. 1. 8 October 1951. http://nla.gov.au/nla.news-article2839310. பார்த்த நாள்: 4 November 2013.
- ↑ Slain British Officer Buried
மேலும் காண்க
[தொகு]- மலேசிய கல்வி அமைச்சு
- மலேசிய அரசாங்கம்
- மலேசிய சிறைத் துறை
- மலேசிய திறன் மேம்பாட்டு துறை
- மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு