உள்ளடக்கத்துக்குச் செல்

உலு தித்தி பாசா மலை

ஆள்கூறுகள்: 5°48′N 101°19′E / 5.800°N 101.317°E / 5.800; 101.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலு தித்தி பாசா மலை
Ulu Titi Basah
பேராக்
உலு தித்தி பாசா மலை Ulu Titi Basah பேராக் is located in தாய்லாந்து
உலு தித்தி பாசா மலை Ulu Titi Basah பேராக்
 தாய்லாந்து
பெத்தோங் மாவட்டம், யாலா மாநிலம்
 மலேசியா
உலு பேராக் மாவட்டம், பேராக்
உயர்ந்த புள்ளி
உயரம்1,533 m (5,030 அடி)
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு5°48′N 101°19′E / 5.800°N 101.317°E / 5.800; 101.317
புவியியல்
அமைவிடம் தாய்லாந்து
பெத்தோங் மாவட்டம், யாலா மாநிலம்
 மலேசியா
உலு பேராக் மாவட்டம், பேராக்
மூலத் தொடர்சங்காலாகிரி மலைத்தொடர்
நிலவியல்
மலையின் வகைகருங்கல் (பாறை)

உலு தித்தி பாசா மலை (மலாய்: Gunung Ulu Titi Basah; ஆங்கிலம்: Mount Ulu Titi Basah தாய்: เขาฮูลูติติปาซา) என்பது தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் மிக உயரமான சிகரமாகும்.[1]

மலேசியா-தாய்லாந்து எல்லையில் மலேசியாவின் பேராக் மாநிலத்தின் உலு பேராக் மாவட்டத்தில்; தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் யாலா மாநிலத்தில் உலு தித்தி பாசா மலை அமைந்துள்ளது.இந்த மலை, அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு புகழ்பெற்ற மலையாகும்.[2]

சங்காலாகிரி மலைத்தொடர்

[தொகு]

சங்காலாகிரி மலைத்தொடரின் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (ஆங்கிலம்: Sankalakhiri Range; தாய்லாந்து மொழி: ทิวเขาสันกาลาคีรี) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.

சங்காலாகிரி மலைத்தொடர், தாய்லாந்து மலேசியாவின் புவிப்பிளவு மண்டலமாகவும் (Suture Zone) விளங்குகிறது. வட தாய்லாந்தில் நான் எனும் மாநிலத்தின் உத்தாராடிட் எனும் இடத்தில் தொடங்கி, கீழ் நோக்கிப் படர்ந்து நீடித்து மலேசியாவின் பகாங் ரவுப் மாநிலத்தில் முடிவுறுகிறது.

தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சங்காலாகிரி மலைத்தொடர், சிம்மெரி (Cimmerian Plate) நிலத் தட்டைச் சேர்ந்ததாகும். இந்த நிலத்தட்டு இந்தோசீனா நாடுகளை இணைக்கும் நிலத் தட்டாகும். சங்காலாகிரி மலைத்தொடரின் கிழக்குப் பகுதி, சினோபர்மலாயா பாறை பெருநிலப்பகுதியுடன் (Sinoburmalaya Continental Terranes) இணைந்துள்ளது.[3][4][5]

தித்திவாங்சா மலைத்தொடர்

[தொகு]

தித்திவாங்சா மலைத்தொடர், தாய்லாந்தின் சங்காலாகிரி மலைத் தொடரின் வட பகுதியில் தொடங்குகிறது. பின்னர், வட மேற்கில் இருந்து தென் கிழக்காகப் படர்ந்து, மலேசிய எல்லையைக் கடந்து, தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செலுபு மாவட்டத்தில் முடிவுறுகிறது. அதன் குன்றுப் பகுதிகள் மட்டும், தென் கிழக்கே ஜொகூர் மாநிலம் வரை செல்கின்றன.[6]

தித்திவாங்சா மலைத்தொடர் சார்ந்த சங்காலாகிரி மலைத்தொடரில் மிக உயர்ந்த இடத்தை குனோங் கொர்பு என்று அழைக்கிறார்கள். இந்த மலையின் உயரம் 2,183 மீட்டர் (7,162 அடி). வடக்கே தாய்லாந்து பகுதியில், மலேசிய எல்லைப் பகுதியில் உள்ள உலு தித்தி பாசா மலைதான் உயர்ந்த இடமாகும்.[7][8]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ulu Titi Basah - Gunung Bagging". 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 1 September 2024.
  2. "Gunong Ulu Titi Basah: Thailand". Geographical Names. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  3. Metcalfe, I., 2000, The Bentong-Raub Suture Zone: Journal of Asian Earth Sciences, v. 18, p. 691-712
  4. Metcalfe, I., 2002, Permian tectonic framework and palaeogeography of SE Asia: Journal of Asian Earth Sciences, v. 20, p. 551-566
  5. Cimmerian plate rifted away from Gondwana and headed towards Laurasia, forming on its southern end the new Tethys Ocean, and closing the Paleo-Tethys Ocean.
  6. Titiwangsa mountain range (Banjaran Titiwangsa in Malay). It extends from Phuket, Thailand and ends in Negeri Sembilan, southwest of Peninsula.
  7. "Mount Ophir or more commonly known by its Malay name "Gunung Ledang", is a mountain situated in the Gunung Ledang National park located between the border of Malacca and Johor state in Malaysia". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.
  8. Gunong Ulu Titi Basah: Thailand

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலு_தித்தி_பாசா_மலை&oldid=4084209" இலிருந்து மீள்விக்கப்பட்டது