பிந்தாங் மலைத்தொடர்
பிந்தாங் மலைத்தொடர் Bintang Mountains ![]() ![]() | |
---|---|
![]() | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,882 m (6,175 அடி)[1] |
புடைப்பு | 1,566 |
ஆள்கூறு | 5°25′45″N 100°52′00″E / 5.42917°N 100.86667°E |
புவியியல் | |
அமைவிடம் | கூலிம் மாவட்டம்; பாலிங் மாவட்டம், கெடா லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; உலு பேராக் மாவட்டம், பேராக் |
நாடு | ![]() |
மூலத் தொடர் | தெனாசிரிம் மலைத்தொடர் (Tenasserim Hills) |
பிந்தாங் மலைத்தொடர் (மலாய்: Banjaran Bintang; ஆங்கிலம்: Bintang Mountains சீனம்: 冕登山脉) என்பது மலேசியாவின் கெடா; பேராக் மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடராகும். தாய்லாந்து நாட்டின் தெனாசிரிம் மலைத்தொடரின் (Tenasserim Hills) ஒரு பகுதியாகவும் உள்ளது.[2]
இந்த மலைத்தொடர் வடக்கே தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள யாலா மாநிலத்தில் (Yala Province) தொடங்கி, கெடா-பேராக் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, பேராக் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மஞ்சோங் மாவட்டத்தின் (Manjung District) புருவாஸ் (Beruas) நகரத்திற்கு தெற்கில் முடிவடைகிறது.[3]
பொது
[தொகு]பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரையில், கிழக்கில் கோலாகங்சார் மாவட்டம் (Kuala Kangsar District) மற்றும் உலு பேராக் மாவட்டம் (Hulu Perak District); மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் (Larut, Matang and Selama District) ஆகிய மாவட்டங்களுக்கு இடையே ஓர் இயற்கையான எல்லையாக இந்த மலைத்தொடர் அமைகிறது.[4]
இந்த மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைத்தொடரை (Titiwangsa Mountains) அதன் கிழக்கே எல்லையாகக் கொண்டுள்ளது. இதுவே கெடா மாநிலத்தில் மிக உயர்ந்த மலைத் தொடராக அறியப்படுகிறது.
முக்கிய மலைச் சிகரங்கள்
[தொகு]பிந்தாங் மலைத்தொடரில் உள்ள பிந்தாங் மலை, கடல் மட்டத்தில் இருந்து 1,882 மீட்டர் (6,174 அடி) உயரத்தில் உள்ள மிக உயர்ந்த மலையாகும். இந்த மலைத்தொடரில் பல முக்கிய மலைச் சிகரங்களும் ஒரு பகுதியாக விளங்குகின்றன.
- போக்பக் மலை (1,199 மீ - 3,933 அடி) (Mount Bokbak)
- இனாசு மலை (1,801 மீ - 5,909 அடி) (Mount Inas)
- உலு ஜெர்னே மலை (1,577 மீ - 5,174 அடி) (Mount Ulu Jernih)
பிந்தாங் மலைத்தொடர் காட்சியகம்
[தொகு]-
மெக்சுவல் மலைவாழ்விடம்
-
பாலிங் ஆறு
-
மெக்சுவல் மலைவாழ்விடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. Retrieved 2015-01-03.
- ↑ Anderson, Ewan W. (2003). International Boundaries: A Geopolitical Atlas. Psychology Press. pp. 521. ISBN 157958375X.
- ↑ "Puncak Gunung Bintang". 2016-01-11. Archived from the original on 2020-10-20. Retrieved 2018-03-23.
- ↑ {{cite web |url=http://www.orientaldaily.com.my/amp/206124 | title=Ancient Mining Relics Discovered in Bintang Mountains - Xinhua English.news.cn|website=www.orientaldaily.com.my | accessdate=2018-03-23}
வெளி இணைப்புகள்
[தொகு]- Info Gunung - Gunung-gunung Malaysia பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம்
- Climb Malaysia Mountains. There are Hundreds To Choose From
- Malaysian Mountains and Highlands
- Mountains In Malaysia, Ethan Shaw, Demand Media