உதயப்பெருமாள் கவுண்டர்
துப்பாக்கிகவுண்டர் என்கின்ற உதயப்பெருமாள்கவுண்டர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார்.[1][2]
வரலாறு
[தொகு]துப்பாக்கிகவுண்டர் என்கின்ற உதயப்பெருமாள்கவுண்டர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்னக்குலம் கிராமத்தில் கொங்கு வேளாளர்[சான்று தேவை] கவுண்டர் குடும்பத்தில் சாத்தந்தை [சான்று தேவை][3] கி.பி.17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்.[4] 15 ஆண்டுகள் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுதல், தோட்டாக்கள் தயாரித்தல், வெடிகுண்டு தயாரித்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்று மிகச்சிறப்பாக செயல்பட்டதால் துப்பாக்கி கவுண்டர் என்றும் அழைக்கப்பட்டார். மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டப் படையில் துப்பாக்கிப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றினார்.[4][5][6]
பணிகள்
[தொகு]- பெரியமருது சிவகங்கை சீமை படையில் துப்பாக்கிப்படை பிரிவை ஏற்படுத்தி இவரை படைத்தளபதியாக நியமித்தார்.
- 1801 ஆம் ஆண்டு ஜூன் 7 -ல் மேஜர் கிரே தலைமையில் பிரித்தானிய படை வருவதை அறிந்த இவர், கொல்லாரிப் போர் முறையில் தாக்குதல் நடத்தி மேஜர் கிரேயை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
- திருப்பாச்சேத்தி ஊரின் அம்பலக்காரராக மருதிருவரால் நியமிக்கப்பட்டார்.
- திருப்பாச்சேத்தி ஊரில் வெட்டரிவாள் அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மறைவு
[தொகு]1801-ல் அக்டோபர் 1 -இல் காளையார் கோவிலில் வெள்ளையருக்கும் சிவகங்கை சீமை படைக்கும் நடந்த போரில் தனது மார்பில் பீரங்கி குண்டுகளைத் தாங்கி இவர் வீரமரணம் அடைந்தார்.[4]
வாரிசுகள்
[தொகு]இவரின் வாரிசுகள் தற்பொழுதும் திருப்பாச்சேத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களே இவ்வூரின் அம்பலக்காரகளாக இருந்து வருகின்றனர். துப்பாக்கி கவுண்டர் இறப்பிற்கு பின்னர் அவரின் மனைவி தனது வாரிசுகளுக்கு பிள்ளை பட்டம் சூட்டி சைவ வேளாளர் பிரிவில் திருமணம் செய்து வைத்தார். தற்பொழுதும் இவரின் வாரிசுகள் கவுண்டபுரத்தார் என ஊர்மக்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி கவுண்டவளவு என்று அழைக்கப்படுகிறது.
சிலை
[தொகு]இவரது சிலையை காளையார் கோவில் முன்னாள் மருது சகோதரர்கள் நிறுவியுள்ளனர்.[சான்று தேவை] இவரின் சிலைக்கு பூசையும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ துப்பாக்கிக் கவுண்டர் வீர வரலாறு | Thuppakki Goundar History | Sudhesi News, பார்க்கப்பட்ட நாள் 2022-07-02
- ↑ "பீரங்கியால் பிளந்த மார்பு.. தமிழனின் அரிவாள் வீச்சுக்கே அடிவயிறு கலங்கி விடும்.. அவன் கையில் துப்பாக்கி கிடைத்தால்..?". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
- ↑ சாத்தந்தை குலம் : கொங்கு வேளாளர் குல வரலாறு | Sathanthai kulam, பார்க்கப்பட்ட நாள் 2022-07-02
- ↑ 4.0 4.1 4.2 ஆக 25, பதிவு செய்த நாள்:; 2017. "பீரங்கி குண்டை மார்பில் தாங்கிய துப்பாக்கிக்கவுண்டர் - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=1841220.
- ↑ "துப்பாக்கி கவுண்டர் நினைவு தினம் திருப்பாச்சேத்தியில் அனுசரிப்பு :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
- ↑ "குறிப்புகள்" (PDF).
வெளி இணைப்புகள்
[தொகு]- துப்பாக்கிக் கவுண்டர், முனைவர் கி. காளைராசன் - மிந்தமிழ் மேடை, கூகுள் புக்சு, பார்த்த நாள்: செப்டம்பர் 1, 2017.