உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்வு நரம்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நால்வகை உணர்வு நரம்பணுக்கள்

உணர்வு நரம்பணு (Sensory neuron) என்பது உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பணுக்களாகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

உணர்வு நரம்பணுக்கள் பெரு மூளையின் உணர்வு பகுதியின் புறணியில் அமைந்துள்ளது. மேலும் முள்ளந்தண்டு வடம் மற்றும் முன் உணர்வு நரம்பணு திறலிலும் உள்ளது. இவைகளை உட்காவும் நரம்பு இணைக்கிறது. அதாவது தோல் மற்றும் உடலுறுப்புகளில் உள்ள உணர்வு வாங்கி (Sensory receptor) மூலம் பெறப்பட்ட தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்ட உணர்வுகளை முன் உணர்வு நரம்பணு திறலுக்கு எடுத்து செல்கிறது இது முதல் நிலை நரம்பு ஆகும். பின் இது முள்ளந்தண்டு பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. பிறகு மூளையின் கீழ் புறணி பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இந்த நரம்பிழை இரண்டாம் நிலை நரம்பு என அழைக்கப்படுகிறது. இதன் பின் இங்கிருந்து நரம்பிழைகள் பெரு மூளையின் புறணியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இது மூன்றாம் நிலை நரம்பணு என வழங்கப்படுகிறது.

உணர்வு வாங்கிகள்

[தொகு]

உணர்வு வாங்கிகள் என்பவை உடலின் வெளிப்புற மற்றும் உட்புற உணர்வுகளை பெற்று உட்காவும் நரம்புகள் மூலம் தூண்டுதல்களை உணர்வு நரம்பணுக்களுக்கு அனுப்புகிறது. இவைகள் புற, அக உணர்வு வாங்கிகள் என இரு வைக்கப்படும்.

புற உணர்வு வாங்கிகள்

[தொகு]
  • பார்வை
  • நுகர்வு
  • செவிப்புலன்
  • ருசியறிதல்
  • வலி
  • தொடுதல்
  • வெப்பம்
  • குளிர்ச்சி
  • அதிர்வு
  • அழுத்தம் ஆகியவற்றிக்கான உணர்வு வாங்கிகள்

அக உணர்வு வாங்கிகள்

[தொகு]
  • இரத்தக்குழாய்
  • உடல் உள்ளுறுப்பு
  • தசை
  • உடலசைவு
  • அக வலி ஆகியவற்றிற்கான உணர்வு வாங்கிகள்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Parsons, Richard (2018). CGP: A-Level Biology Complete Revision & Practice. Newcastle Upon Thynde: Coordination Group Pulbishing Ltd. pp. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781789080261.
  2. Purves, Dale; Augustine, George; Fitzpatrick, David; Hall, William; LaMantia, Anthony-Samuel; McNamara, James; White, Leonard (2008). Neuroscience (4 ed.). Sinauer Associates, Inc. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0878936977.
  3. Sherrington C. The Integrative Action of the Nervous System. Oxford: Oxford University Press; 1906.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வு_நரம்பணு&oldid=4050322" இலிருந்து மீள்விக்கப்பட்டது