உள்ளடக்கத்துக்குச் செல்

புலனுணர்வு ஏற்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலனுணர்வு ஏற்பி ( Sensory receptor) என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே செல்லில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு செல்லில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறலை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.

மனிதனின் புலனுணர்ச்சி அமைப்பு

செயற்பாடுகள்

[தொகு]

சுவை மற்றும் மணம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய புலனுணர்வு ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகளின் மூலக்கூறு அமைப்புடன், இடைவினை நிகழ்த்துகின்ற மோப்ப ஏற்பி நரம்புகளில் உள்ள மணம் ஏற்பிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்த ஒரு செயல்திறலை உருவாக்குகின்றன.

தொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி செல்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.

புலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது அங்கமாகும்.

தனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

புலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான உத்தேச நிலையுடன் [1] உயிர் இயற்பியல் [2] விளக்கப் படம் பார்க்கவும்).

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலனுணர்வு_ஏற்பி&oldid=2047958" இலிருந்து மீள்விக்கப்பட்டது