உட்காவும் நரம்பு
உட்காவும் நரம்புகள் (ஆங்கிலம் : Afferent nerves) இவை உணர்வு நரம்புகள் (ஆங்கிலம் : Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (ஆங்கிலம் : Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (ஆங்கிலம் : Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான தோலில் இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.[1][2][3]
உட்காவும் நரம்பு அமைத்துள்ள புற நரம்பு மண்டலம் மற்றும் மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றில் சிறிது மாறுபட்ட சொல்லால் அழைக்கப்படுகிறது. அவை முறையே உட்காவும் நரம்பிழை, உணர்வு நரம்பிழை வழித்தடம் (ஆங்கிலம்:Sensory track or Afferent track) ஆகும்.
அமைப்பு
[தொகு]தோல் மற்றும் உடலுறுப்புகளில் உள்ள உணர்வு வாங்கி (ஆங்கிலம்:Sensory receptor) மூலம் பெறப்பட்ட தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி, வலி, வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்ட உணர்வுகளை முன் உணர்வு நரம்பணு திறலுக்கு (ஆங்கிலம்:Dorsal root ganglion) எடுத்து செல்கிறது இது முதல் நிலை நரம்பு (ஆங்கிலம்:First order neuron) ஆகும். பின் இது முள்ளந்தண்டு பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. பிறகு மூளையின் கீழ் புறணி பகுதியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இந்த நரம்பிழை இரண்டாம் நிலை நரம்பு (ஆங்கிலம்:Second order neuron) என அழைக்கப்படுகிறது. இதன் பின் இங்கிருந்து நரம்பிழைகள் பெரு மூளையின் புறணியில் உள்ள உணர்வு நரம்பணுவுடன் இணைக்கப்படுகிறது. இது மூன்றாம் நிலை நரம்பணு என வழங்கப்படுகிறது.(ஆங்கிலம்:Third order neuron)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mader S. S. (2000): Human biology. McGraw-Hill, New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-290584-0; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-117940-2.
- ↑ Hall J. E., Guyton A. C. (2006): Textbook of medical physiology, 11th edition. Elsevier Saunders, St. Louis, Mo, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1.
- ↑ Warrell D. A., Cox T. M., Firth J. D. (2010): The Oxford Textbook of Medicine பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம் (5th ed.). Oxford University Press