இ. எஸ். பொறியியல் கல்லூரி
இ. எஸ். பொறியியல் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
இ. எஸ். நகர், சென்னை நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 45 , அய்யங்கோவில்பட்டு, விழுப்புரம் - 605 602, தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | கல்வி நிறுவனம் |
தொடக்கம் | 2007 |
பகுதி பொறுப்பாளர் | இ. எஸ் கல்வி குழுமம் |
Chairman | எஸ். செல்வமணி |
இணையம் | http://www.escet.in |
இ. எஸ். பொறியியல் கல்லூரி (E.S Engineering College) ஆனது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அய்யங்கோவில்பட்டு என்னும் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் தமிழக மாணவர்களும் வட இந்திய மாணவர்களும் படிக்கின்றனர்.[1]
வரலாறு
[தொகு]இக்கல்லூரி 2007 ஆம் ஆண்டு இ. எஸ். கல்வி குழுமத்தால் நிறுவப்பட்டது. இ. எஸ். கல்வி குழுமமானது 30 வருட அனுபவம் கல்வி துறையில் உள்ளது.[சான்று தேவை] 1983 ஆம் ஆண்டில் இதன் முதல் கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தது, அதன் பிறகு படிப்படியாக வளர்ந்துள்ளது. இந்த குழுமத்தின் தலைமையிடம் விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ளது.[2]
நிறுவனம்
[தொகு]இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலின் (NAAC) தர அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றிதழ் பெற்றது. மேலும் இது புது தில்லியில் இயங்குகின்ற ஏ.ஐ.சி.டி.இ., என்.பி.ஏ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும்.
இருப்பிடம்
[தொகு]இது சென்னை - திருச்சி 45வது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 157 கி.மீ தொலைவிலும் உள்ளது. விழுப்புரம் இரயில் நிலையம் 3 கி. மீ தொலைவில் உள்ளது.
உள்கட்டமைப்பு
[தொகு]இங்கு மாணவ, மாணவிகளுக்கென தனி, தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. கல்லூரியில் உள்ள நூலகத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் அத்துடன் தொழில்நுட்ப இதழ்களும் பிற இதழ்களும் உள்ளன. கணினி ஆய்வகங்கள், பொழுதுபோக்கு அறைகள், விளையாட்டு வசதிகள், உணவகம் போன்றவை உள்ளன.
தேர்வு முறை
[தொகு]ஒவ்வொரு கல்வி ஆண்டும் இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவங்களிலும் அனைத்து கோட்பாடு பாடங்களில் மூன்று உள் தேர்வுகளும், மற்றும் ஒரு இறுதித் தேர்வும் இருக்கும். ஆய்வகத் தேர்வுகள் இறுதித் தேர்வை தொடர்ந்து உள் தேர்வாக வைக்கப்படுகிறது. அனைத்துத் தேர்வுகளும் இந்தியாவின் பிற பொறியியல் கல்லூரிகள் போன்றே எழுத்துத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் முறை வழக்கத்தில் உள்ளது.