இளையராஜாவின் இசைப்பதிவுகள்
Appearance
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இளையராஜா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

பத்தாண்டு வாரியாக புள்ளிவிபரம்
[தொகு]இளையராஜா 1970களில் | இளையராஜா 1980களில் | இளையராஜா 1990களில் | இளையராஜா 2000களில் | இளையராஜா 2010களில் |
வரவிருக்கும் படைப்புகள்
[தொகு]கீழேயுள்ள பட்டியல் இளையராஜா இயற்றி வரவிருக்கும் / அறிவிக்கப்பட்ட திரைப்படங்களை அளிக்கிறது.
Year | Language | Film | Director | Dubbed/Notes | Status |
---|---|---|---|---|---|
2017 | தமிழ் |
அஞ்சலி பாப்பா |
அறிவிக்கப்பட்டது | ||
2017 | தமிழ் |
கட்டம் போட்ட சட்டை |
பிரசாத் |
அறிவிக்கப்பட்டது | |
2017 | தமிழ் |
என் ராசாவின் மனசிலே 2 |
ராஜ்கிரண் |
அறிவிக்கப்பட்டது | |
2017 | தமிழ் |
அம்மாயி | சங்கர் |
அறிவிக்கப்பட்டது |
பாடல் தொகுப்பு (திரைப்படமல்லாதவை)
[தொகு]- இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
- "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
- "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
- "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
- 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
- "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
- "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
- ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
- "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
- மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
பார்க்கவும்: இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்
தொலைக்காட்சி
[தொகு]- 1991 பெண்
- 2008 நம்ம குடும்பம்
- 2008 தெக்கத்திப் பொண்ணு
விளம்பர இசை
[தொகு]- ஐடியா செல்லுலர் (பல்லவி அனுபல்லவி நகுவா பாடலைப் பயன்படுத்தியது)
- மலபார் தங்கம் மற்றும் வைரங்கள்
திரைத்தோற்றம்
[தொகு]Year | Movie title | Notes |
---|---|---|
1980 | நிழல்கள் | பாடல் பாடகர் "மடை திறந்து" |
1985 | தர்மபத்தினி | பாடல் விருந்தினர் தோற்றம் "நான் தேடும்[1] |
1986 | சாதனை | பாடல் விருந்தினர் தோற்றம் "ஓ வானம்பாடி"[2] |
1989 | புதுப்புது அர்த்தங்கள் | சிறப்புத் தோற்றம் "கல்யாண மாலை" பாடல் காட்சி[3] |
1989 | கரகாட்டக்காரன் | கெளவரத் தோற்றம் - "பாட்டாலே புத்தி"[4] |
1991 | கும்பக்கரை தங்கையா | கெளவரத் தோற்றம் - "என்னை ஒருவன் பாட சொன்னான்" பாடல்[5] |
1992 | வில்லுப்பாட்டுக்காரன் | கோவிலில் விருந்தினர் தோற்றம் 11:50 முதல் 14:50 வரை [6] |
1998 | கண்ணாத்தாள் | கெளவரத் தோற்றம் - "அம்மன் புகழை" பாடல் |
2009 | அழகர் மலை | Guest appearance in the song "உலகம் இப்போ"[7] |
2013 | நாடி துடிக்குதடி | Guest appearance in the song "காதலே இல்லாத தேசம்"[8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naan Thedum Sevvanthi Poovithu — Dharmapatini". Youtube.
- ↑ https://www.youtube.com/watch?v=p17_wn-lHBo
- ↑ "Kalyanamaalai — Pudhu Pudhu Arthangal". Youtube. Raj Video Vision. Retrieved 20 November 2015.
- ↑ "Paatale Budhi — Karagattakaran". Youtube. Retrieved 20 November 2015.
- ↑ "Ennai Oruvan — Kumbakarai Thangaiah". Youtube. Retrieved 20 November 2015.
- ↑ "Villu Pattukaran — Villu Pattukaran". Youtube. Retrieved 20 November 2015.
- ↑ "Ulagam Ippo — Azhagar Malai". Youtube. Eros Tamil. Retrieved 20 November 2015.
- ↑ "Kadhale Illadha — Naadi Thudikkuthadi". Youtube. Times music south. Retrieved 20 November 2015.