இராணுவக் காவல் படை (இந்தியா)
Appearance
இராணுவக் காவல் படை | |
---|---|
படிமம்:IA Corps of Military Police.png இராணுவக் காவல் துறையின் முகட்டுச் சின்னம் | |
செயற் காலம் | 1939–தற்போது வரை |
நாடு | ![]() |
கிளை | ![]() |
அளவு | ஏறத்தாழ 9,000 |
படையணியின் தலைமையிடம் | பெங்களூர், கர்நாடகம் |
குறிக்கோள்(கள்) | சேவை உதவி |
ஆண்டு விழாக்கள் | 18 அக்டோபர் |
பதக்கம் | • பரம் விசிட்ட சேவா பதக்கம் -1 • அதி விசிட்ட சேவா பதக்கம்-1 |

'இந்திய இராணுவக் காவல் துறை (Corps of Military Police (CMP), இந்திய இராணுவத்தின் காவல் துறை ஆகும். இது இந்திய இராணுவக் காவல் படையின் (Corps of Military Police (India)ஒரு அங்கமாகும். போர்க் கைதிகளை கையாள்வது, போக்குவரத்துத்தை ஒழுங்கு படுத்துவது, தொலைபேசி நிலையங்களை கையாள்வது இராணுவக் காவலர்களின் முதன்மைப் பணியாகும்.
இக்காவலர்கள் அணியும் வெள்ளைத் தொப்பி, வெள்ளை பற்றுக்கயிறு மற்றும் வெள்ளை இடுப்புக் கச்சை மூலம் இவர்களை அடையாளம் காணலாம், மேலும் இவர்கள் சிவப்பு நிறத்தில் MP' என அச்சிடப்பட்ட எழுத்துக்களுடன் கூடிய கருப்பு பித்தளை பொத்தான் அணிவர். அணிந்துள்ளனர்.
இராணுவ காவல்துறையின் பங்கு மற்றும் பணி
[தொகு]- இராணுவப் பாசறைகள் மற்றும் இராணுவ நிறுவனங்களை காவல் காத்தல்
- இராணுவ நிறுவங்களில் ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை பராமரித்தல் மற்றும் வழக்கமான இராணுவ வீரர்கள் விதிமுறைகளை மீறுவதைத் தடுப்பது.
- அமைதி மற்றும் போரின் போது இரண்டு முறையும் பாசறைகளில் தளவாடங்கள், வீரர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை பராமரித்தல்
- போர்க் கைதிகளைக் கையாளுதல்
- போர்க்களத்தில் அலைந்து திரிபவர்கள் மற்றும் அகதிகளைக் கட்டுப்படுத்துதல்
- படைப்பிரிவுகளின் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவி செய்தல்
- மாநில காவல்துறை மற்றும் கடற்படை மற்றும் விமானப்படை காவலர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பு
- இந்திய ராணுவத்தின் வழக்குகளின் விசாரித்து, இராணுவ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது.
- பிரிவு தளபதிகள், மண்டல தளபதிகள், உயர் தளபதிகள் மற்றும் தலைமை படைத் தலைவருக்கு பைலட் வாகனங்களை வழங்குதல்
- இராணுவத் தளபதிகளுக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்குதல்
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]https://indianarmy.nic.in/about/the-rajput-regiment/corps-of-military-police#skipCont