உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய இராணுவப் பொறியாளர்கள் படை
செயற் காலம்1777 - தற்போது வரை
நாடு இந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
அரண்/தலைமையகம்புது தில்லி, இந்தியா
குறிக்கோள்(கள்)எங்கும் (அனைத்து இடங்களிலும்)
நிறம்மெரூன் மற்றும் நீலம்
சண்டைகள்முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்
இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர்
முதலாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்
இந்திய சீனப் போர்
இந்தியா-பாகிஸ்தான் போர், 1947
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
கார்கில் போர்
தளபதிகள்
தலைமைப் பொறியாளர்லெப்டினண்ட் ஜெனரல் அரவிந்த் வாலியா[1]
படைத்துறைச் சின்னங்கள்
படையணியின் கொடி

இந்திய இராணுவப் பொறியாளர்கள் படை (Indian Army Corps of Engineers), இது 1777ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் தரைப்படையினருக்கு உதவிட நிறுவப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகள், துணை இராணுவப் படைகளுக்கும் மற்றும் இயற்கைப் பேரிடர் காலங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் படையாகும்.[2]இப்படையில் சேருர்பவர்களுக்கு புனே இராணுவப் பொறியியல் கல்லூரியில் பயிற்சி வழங்குகிறது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவப் பொறியாளர்கள் படையணி செயல்படுகிறது. தலைமைப் பொறியாளரான லெப்டினண்ட் ஜெனரல் தலைமையில் இது செயல்படுகிறது.

அமைப்பு

[தொகு]

லெப்டினண்ட் ஜெனரல் தலமையிலான இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையானது மெட்ராஸ் சாப்பர்ஸ், பெங்கால் சாப்பர்ஸ் மற்றும் பம்பாய் சாப்பர்ஸ் எனும் மூன்று பிரிவுகள் கொண்டது.

இந்த அமைப்பு இராணுவப் பொறியாளர்கள் சேவை (Military Engineer Services)[3]எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு மற்றும்இந்திய நில அளவைத் துறையுடன் நெருங்கியத் தொடர்புடையது..[4]

போர்க் காலங்களில் இராணுவப் பொறியாளர்கள் படையணியின் பணிகள்

[தொகு]

போர்க் காலங்களில் இப்படையணி பாலங்கள் நிறுவதல், வழித்தடங்கள் அமைத்தல், உலங்கு வானூர்திகளுக்கான இறங்குதளம் அமைக்கும் பணி மேற்கொள்கிறது. அதே நேரத்தில் எதிரி நாட்டின் கண்ணி வெடிகளை கண்டு செயல் இழக்கச் செய்தல், பாலங்களை குண்டுகள் வைத்து அழித்தல், போர்க் களங்களின் நில அளவை வரைபடம் தயாரித்தல் மற்றும் பதுங்கு குழிகள் மற்றும் பதுங்கு கட்டங்களை நிறுவதல் ஆகும்.

கலந்து கொண்ட போர்கள்

[தொகு]

இராணுவப் பொறியாளர்கள் சேவைகள்

[தொகு]

இராணுவப் பொறியாளர் சேவை அதிகாரிகள் (Military Engineer Services) இராணுவக் கட்டிடங்கள், இராணுவ விமான நிலையங்கள், கடற்படை கப்பல் துறைகள் நிறுவல்கள் போன்றவற்றின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மற்றும் இராணுவச் சாலைகள், நீர், மின்சாரம் வழங்கல் மற்றும் வடிகால் வசதிகளை திட்டமிட்டு தருவதுடன்,. இந்தியாவின் தரைப்படை, கடற்படை, விமானப் படை மற்றும் கடலோர காவல்படைக்கு தேவையான குளிர்பதன வசதிகள், தளபாடங்களை வடிவமைத்து தருகிறது.[5][6]

இது இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ஆகியவற்றின் பொறியியல் ஆதரவை வழங்குவதற்காக நாடு முழுவதும் இராணுவப் பொறியாளர்கள் சேவைப் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இராணுவப் பொறியாளர்கள் சேவைகள் அமைப்பு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சேவை நிறுவனமாகும். இந்த சேவையில் இராணுவப் பொறியாளர்களுடன், இந்தியப் பாதுகாப்பு பொறியாளர்கள் சேவைப் பிரிவில் (Indian Defence Services of Engineers) கட்டடக் கலை நிபுனர்கள், நில அளவையாளர்கள் போன்ற சிவில் சமூகத்தவரும் சார்-நிலை அலுவலர்களாக பணியாற்றுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gazette of India No 45" (PDF). 2020-11-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  2. "Indian Army Celebrates 240th Corps of Engineers Day". Press Information Bureau. Government of India- Ministry of Defence.
  3. "MES official website".
  4. Globalsecurity.org, Indian Corps of Engineers
  5. Globalsecurity.org, Military Engineer Services
  6. "Home | Military Engineer Services, Government of India". mes.gov.in.

வெளி இணைப்புகள்

[தொகு]