இந்திரா இந்துசா
இந்திரா இந்துசா Indira Hinduja | |
---|---|
பிறப்பு | சில்கர்பூர், சிந்து மாகாணம் (1936–55), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியாn |
துறை | மலட்டுத்தன்மை |
பணியிடங்கள் | கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை, மும்பை |
கல்வி கற்ற இடங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
விருதுகள் | பத்மசிறீ (2011) |
இந்திரா இந்துசா (Indira Hinduja) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார்.[1] மும்பையைச் சேர்ந்த இவர் மகப்பேறியல் மற்றும் மலட்டுத்தன்மை பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணராக கருதப்படுகிறார். பாலின உயிரணுக்களை கருப்பை இணைப்புக் குழாய்க்குள் செலுத்தும் நுட்பத்தின் விளைவாக 1988 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவின் முதலாவது குழந்தையை பிறக்க வைத்தார். முன்னதாக இவர் 1986 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் தேதி கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் இந்தியாவின் இரண்டாவது வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் சோதனைக் குழாய் குழந்தையை பிரசவிக்க வைத்தார். [2] மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், முன்கூட்டியே கருப்பையை இழந்த நோயாளிகளுக்கும் கருமுட்டை தானம் எனும் கருத்தறிப்பு நுட்பத்தை உருவாக்கிய பெருமைக்கூறியவராகவும் இந்துசா கருதப்படுகிறார். கருமுட்டை தான நுட்பம் வழியாக நாட்டின் முதலாவது குழந்தையை 1991 ஆம் ஆண்டு சனவரி 24 ஆம் தேதி பிரசவிக்க வைத்தார். [3]
கல்வி
[தொகு]மனிதர்களில் செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கருமுட்டை பரிமாற்றம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பையிலுள்ள பி.டி.இந்துசா மருத்துவமனையில் முழுநேர மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவராக இந்துசா பணியாற்றினார்.[3] தற்போது இதே பி.டி.இந்துசா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கௌரவ மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவராகவும் இவர் உள்ளார்.
விருதுகள்
[தொகு]- இளம் இந்தியர் விருது (1987)
- மகாராட்டிரா மாநில யேசீ விருதுதான சிறந்த பெண் குடிமகள் விருது (1987)
- திறமைசாலி பெண்களுக்கான பாரத் நிர்மன் விருது (1994)
- மும்பை நகரத் தந்தை வழங்கிய பன்னாட்டு மகளிர் தின விருது (1995; 2000)
- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (1999)
- மகாராட்டிராவின் ஆளுநர் வழங்கிய தன்வந்தரி விருது (2000)
- இந்திய அரசாங்கம் வழங்கும் பத்மசிறீ விருது(2011)[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Profile of Dr. Indira Hinduja பரணிடப்பட்டது 2016-07-16 at the வந்தவழி இயந்திரம் at Hinduja Hospital.
- ↑ "India First Test Tube Baby.". New Strait Times. 8 August 1986. https://news.google.com/newspapers?id=I9RHAAAAIBAJ&sjid=po4DAAAAIBAJ&pg=6814,2022108&dq=indira+hinduja&hl=en.
- ↑ 3.0 3.1 "Dr. Indira Ahuja Profile". NDTV Doctor. 20 July 2009. http://doctor.ndtv.com/expert/ndtv/expertid/84/Indira_Hinduja.html.
- ↑ Ministry of Home Affairs(25 January 2011). "Padma Awards Announced". செய்திக் குறிப்பு.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.hindujahospital.com/hindujaivfcentre/specialist/dr-indira-hinduja.html பரணிடப்பட்டது 2016-07-16 at the வந்தவழி இயந்திரம்
- https://news.google.com/newspapers?id=I9RHAAAAIBAJ&sjid=po4DAAAAIBAJ&pg=6814,2022108&dq=indira+hinduja&hl=en
- http://doctor.ndtv.com/expert/ndtv/expertid/84/Indira_Hinduja.html
- http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364