உள்ளடக்கத்துக்குச் செல்

அந்திப்பன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய இழைத்துடுப்புப் பாரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அந்திப்பன்னா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Percoidei
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:
Alectis
இனம்:
A. indicus
இருசொற் பெயரீடு
Alectis indicus
(Rüppell, 1830)
பாரை மீன்களின் பரம்பல் (துல்லியமானதல்ல)
வேறு பெயர்கள்
  • Scyris indicus (Rüppell, 1830)
  • Alectis indica (Rüppell, 1830)
  • Seriolichthys indicus (Rüppell, 1830)
  • Hynnis insanus (Valenciennes, 1862)
  • Caranx gallus (Klunzinger, 1879)
  • Hynnis momsa (Herre, 1927)

அந்திப்பன்னா,[1] கண்ணாடி மீன், சாய்சதுரப்பாரை (Alectis indicus) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலான கடற்கரைகளோரம் கூடுதலாக வாழுகின்றன.[2] வயது வந்த மீன்கள் 100 மீ ஆழம் வரையிலான கடற் படுகைகளிலும் இளம் குஞ்சுகள் கயவாய்களிலும் (estuary[3]) ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. கொன்றுண்ணி வகையைச் சேர்ந்த இவை பல்வேறு வகையான மீன்கள், சிறு கணவாய்கள், கடல் இழுதுகள், ஓடுடைய இனங்கள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.

பெங்களூரில் ஒரு மீன் கடையில்

இவை அதிகாலையிலும், அந்திநேரத்திலும் மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும் இதனால் இவை அந்திப்பன்னா என்ற பெயரைப் பெற்றன. இவை 165 செ. மீ நீளமும் 25 கிலோ எடை வரையும் வளரும் பெரிய மீன்கள்.[4] இவை பிற மீன்கள், நத்தைகள், கணவாய்கள், மற்றும் கடல்வாழ் விலங்குகளை உண்டு வாழும் கோண்மாக்கள். இவ்வகை மீன்களை சிங்கப்பூரில் வணிக அளவில் உணவிற்காக பண்ணைகளில் வளர்க்கின்றனர்.[5] ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட தொல்பொருளியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களின் அடிப்படையில் இவற்றை மனிதர்கள் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தியுள்ளது அறியப்பட்டுள்ளது.[6]

இவற்றின் குஞ்சுகளை வீட்டு வளர்ப்பு விலங்குகளாக மீன் தொட்டிகளில் வளர்ப்பதுண்டு. ஆனால் அதற்கு பெரிய தொட்டிகளும் உடன்வளர்க்கப்படும் மீன்கள் அமைதியானவைகளாக இருப்பதும் தேவை.[7]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alectis indica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "மீன்களுக்குள் மறைந்திருக்கும் தமிழ்!". Hindu Tamil Thisai. 2023-06-04. Retrieved 2023-06-28.
  2. Carpenter, Kent E. (2001). FAO species identification guide for fishery purposes. The living marine resources of the Western Central Pacific. Volume 5. Bony fishes part 3 (Menidae to Pomacentridae) (PDF). Rome: FAO. p. 2684. ISBN 92-5-104587-9. {{cite book}}: Check |url= value (help); Unknown parameter |coauthors= ignored (help)
  3. Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. p. 196. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Alectis indicus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2007 version. N.p.: FishBase, 2007.
  5. Chou, R.; H.B. Lee (1997). "Commercial marine fish farming in Singapore". Aquaculture Research (Blackwell Synergy) 28 (10): 767–776. doi:10.1046/j.1365-2109.1997.00941.x. 
  6. Potts, D.T. (1997). Before the Emirates: an Archaeological and Historical Account of Developments in the Region c. 5000 BC to 676 AD in Perspectives on the United Arab Emirates (PDF). pp. pp 28-69. Archived from the original (PDF) on 2012-07-17. Retrieved 2007-11-29. {{cite book}}: |pages= has extra text (help)
  7. Pet education. "Indian threadfin". Fish. Foster & Smith, Inc. Retrieved 2007-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திப்பன்னா&oldid=3745774" இலிருந்து மீள்விக்கப்பட்டது