ரோகு மீன்
ரோகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. rohita
|
இருசொற் பெயரீடு | |
Labeo rohita F. Hamilton, 1822 |
ரோகு (Rohu அல்லது roho labeo (Labeo rohita, இந்தி (ம)நேபாளத்தில்- रोहू मछली, ஒடியா- ରୋହୀ,) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3 அடி நீளம் உடையது.[சான்று தேவை] 30 கிலோ எடையளவுக்கு வளரும்.[சான்று தேவை] இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
தோற்றம்
[தொகு]இம்மீனின் தலை கடலாவின் தலையைவிட சிறியது.இம்மீனின் கீழ் உதடு சுருக்கங்களுடன் காணப்படும், இம்மீனின் வாய் நேராக திறந்திருக்கும், இதன் செதில்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
உணவுப் பழக்கம்
[தொகு]இது குளத்தின் நடு அல்லது இடைமட்டத்தில் உள்ள, தாவர விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில்3/4 முதல் 1 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[1]
இனப்பெருக்கக் காலம்
[தொகு]இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
உசாத்துணை
[தொகு]காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை