உள்ளடக்கத்துக்குச் செல்

அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலோர் ஸ்டார் (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலோர் ஸ்டார் (P009)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Alor Setar (P009)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார்
மக்களவைத் தொகுதி
மாவட்டம்கோத்தா ஸ்டார் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிஅலோர் ஸ்டார் தொகுதி
முக்கிய நகரங்கள்அலோர் ஸ்டார்
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அப்னான் அமிமி தாயிப் அசாமுதீன்
(Afnan Hamimi Taib Azamudden)
வாக்காளர்கள் எண்ணிக்கை105,994[1][2]
தொகுதி பரப்பளவு111 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]




2022-இல் அலோர் ஸ்டார் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (63.8%)
  சீனர் (31.9%)
  இதர இனத்தவர் (0.3%)

அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Alor Setar; ஆங்கிலம்: Alor Setar Federal Constituency; சீனம்: 亚罗士打联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P009) ஆகும்.[5]

அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே 1955-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), அலோர் ஸ்டார் தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[6]

அலோர் ஸ்டார்[தொகு]

கோத்தா ஸ்டார் மாவட்டம்[தொகு]

கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[7]

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[8]

அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி[தொகு]

அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் அலோர் ஸ்டார் தொகுதி உருவாக்கப்பட்டது
அலோர் ஸ்டார்
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
மலாயா மக்களவை 1955–1959 1955–1959 லீ தியன் இன்
(Lee Thean Hin)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
மலாயா மக்களவை 1959–1963 P006 1959–1963 லிம் சூ கோங்
(Lim Joo Kong)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P006 1963–1964 லிம் சூ கோங்
(Lim Joo Kong)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
2-ஆவது மக்களவை 1964–1969 லிம் பீ அங்
(Lim Pee Hung)
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9]
3-ஆவது மக்களவை P006 1971–1973 லிம் பீ அங்
(Lim Pee Hung)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
அலோர் ஸ்டார்
4-ஆவது மக்களவை P007 1974–1978 ஓ சின் சன்
(Oo Gin Sun)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 சோர் சீ இயூங்
(Chor Chee Heung)
அலோர் ஸ்டார்
9-ஆவது மக்களவை P009 1995–1999 சோர் சீ இயூங்
(Chor Chee Heung)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 கூய் இசியோ லியூங்
(Gooi Hsiao-Leung)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
அலோர் ஸ்டார்
14-ஆவது மக்களவை P009 2018–2022 சான் மிங் காய்
(Chan Ming Kai)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அப்னான் அமிமி அசாமுதீன்
(Afnan Hamimi Azamudden)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

அலோர் ஸ்டார் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
அப்னான் அமிமி அசாமுதீன்
(Afnan Hamimi Azamudden)
பெரிக்காத்தான் நேசனல் 37,486 48.69% + 48.69%
சைமன் ஊய் மின்
(Simon Ooi Min)
பாக்காத்தான் அரப்பான் 27,555 35.79% - 15.01%
தான் சி இயோங்
(Tan Chee Heong)
பாரிசான் நேசனல் 8,930 11.60% - 10.58%
முகமது நுகைரி ரகுமத்
(Mohamad Nuhairi Rahmat)
உள்நாட்டு போராளிகள் கட்சி 2,383 3.10% + 3.10%
பட்சில் அனாபி
(Fadzil Hanafi)
சபா பாரம்பரிய கட்சி 366 0.48% + 0.48%
சோபான் பெரோசா யூசோப்
(Sofan Feroza Md Yusup)
சுயேச்சை 151 0.20% + 0.20%
நோர்டின் யூனோசு
(Nordin Yunus)
சுயேச்சை 115 0.15% + 0.15%
செல்லுபடி வாக்குகள் (Valid) 76,986 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 774
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 209
வாக்களித்தவர்கள் (Turnout) 77,976 73.6% - 7.49 %
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 105,994
பெரும்பான்மை (Majority) 9,931 12.90% - 10.88%
பெரிக்காத்தான் நேசனல் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

அலோர் ஸ்டார் சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N12 சுக்கா மெனாந்தி சொவகிர் அப்துல் கனி
(Dzowahir Ab Ghani)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
N13 கோத்தா தாருல் அமான் தே சுவீ லியோங்
(Teh Swee Leong)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
N14 அலோர் மெங்குடு முகமது ரடி மாட் சின்
(Muhamad Radhi Mat Din)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. Archived from the original (PDF) on 2018-04-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "The entire Kota Setar District is under the administration of the Kota Setar District Office, while the land administration is divided into the administration of the Kota Setar Land Office and the Pokok Sena Land Office". பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
  8. "Latar Belakang Daerah Kota Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]