உள்ளடக்கத்துக்குச் செல்

அர்வா டாமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்வா டாமன்
மே 2012 இல் அர்வா டாமன்
பிறப்புசெப்டம்பர் 19, 1977 (1977-09-19) (அகவை 47)
பாஸ்டன், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்இசுகிட்மோர் கல்லூரி (இளங்கலை)
பணிபத்திரிக்கையாளர்

அர்வா டாமன் ( Arwa Damon; பிறப்பு: செப்டம்பர் 19, 1977)[1] ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் ஆவார். இவர் சமீபத்தில் இசுதான்புல்லைத் தளமாகக் கொண்ட சிஎன்என் தொலைக்காட்சியின் மூத்த சர்வதேச நிருபராக இருந்தார். 2066இல் சிஎன்என்-ல் சேருவதற்கு முன்பு, 2033 முதல் சுதந்திர எழுத்தாளராக மத்திய கிழக்கைப் பற்றிய தகவல்களை வழங்கி வந்தார் .சிரியாவிலிருந்து அகதிகளாக வரும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஐஎன்ஏஆர்ஏ[2] என்ற மனிதாபிமான அமைப்பின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ஒரு அமெரிக்க தந்தைக்கும் சிரிய தாய்க்கும் பாஸ்டனில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை மசாசூசெட்ஸில் உள்ள வேலண்டில் கழித்தார்.[3]  ஆகஸ்ட் 1949 சிரிய சதிப்புரட்சியில் தூக்கிலிடப்பட்ட சிரியாவின் முன்னாள் சிரிய குர்த் பிரதம மந்திரி முஹ்சின் அல்-பராசியின் பேத்தி ஆவார்.<[4]

ஆறு வயதில், இவரது குடும்பம் மொரோக்கோகோவிற்கு குடிபெயர்ந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கியின் இசுதான்புல்லில், இவரது தந்தை ராபர்ட் கல்லூரியில் ஆசிரியராகவும் நடுநிலைப் பள்ளி இயக்குநராகவும் சேர்ந்தார். மேலும் அங்கிருந்து இசுமிரில் உள்ள இஸ்கென்ட் பள்ளிக்குச் சென்றார். பின்னர் 2003 முதல் 2013 இல் ஓய்வு பெறும் வரை பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க சமூகப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.[5]

அர்வா, ஆறாம் வகுப்பைத் தவிர்த்துவிட்டு தனது 16வது வயதில் ராபர்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[4][6] 1999 இல் பிரெஞ்சு மற்றும் உயிரியலில் இரட்டைப் பட்டத்தையும் சர்வதேச விவகாரங்களிலும் பட்டம் பெற்றார். அரபு, பிரஞ்சு, துருக்கியம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் பேசக்கூடியவராக இருந்தவர்.

நிருபராவதற்கு முன்பு, அர்வா நியூயார்க்கை தளமாகக் கொண்ட துருக்கிய துணி ஆலை நிறுவனத்தில் பணியாற்றினார்.

தொழில்

[தொகு]

9/11 க்குப் பிறகு ஒரு பத்திரிகையாளராக மாற முடிவு செய்த இவர் ஈராக் போரின் தொடக்கத்திற்கு முன்பு பாக்தாத்திற்கு சென்றார்.[4][7] காமிரா பிலானெட்- இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இது தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புகளுக்கான ஊடக உள்ளடக்கத்தை வழங்குகிறது. பீட்டர் ஆர்னெட்டின் நிருபர்கள் குழுவை போருக்கு முந்தைய ஈராக்கிற்கு அழைத்துச் செல்வதற்காக பணியாற்றினார். பிப்ரவரி 2006 இல் பல தொலைக்காட்சி நிறுவடங்களுடன் பணிபுரியும் ஒரு சுதந்திரப் பத்திரிககையாளாரக மூன்று வருடங்கள் மத்திய கிழக்கை உள்ளடக்கி பணியாற்றினார்.  

சர்ச்சை

[தொகு]

ஜூலை 19, 2014 அன்று, போதையில் இருந்த அர்வா தங்களைக் கடித்ததாகக் கூறி, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் இவர் மீதும் இவர் பணிபுரிந்த சிஎன்என் மீதும் வழக்குத் தொடர்ந்தனர். இவர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.[8][9]

சான்றுகள்

[தொகு]
  1. "Media People: CNN's Arwa Damon on War Reporting, Tattoos and Close Calls". November 10, 2017. பார்க்கப்பட்ட நாள் September 14, 2020.
  2. "Our Board". INARA. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  3. "Word from the Headmaster". ACS.edu.lb. Archived from the original on January 25, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
  4. 4.0 4.1 4.2 Mitchell, Heidi (November 19, 2012). "Facing the Truth: CNN's Arwa Damon". Vogue. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-30.
  5. "Special dinner held recognizing Dr. George H. Damon, Jr., retiring head of the American Community School at Beirut". American Community School, Beirut; News Post. 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-01.
  6. CNN Programs – Anchors/Reporters – Arwa Damon CNN.
  7. Gold, Hadas. "Getting There: CNN's Arwa Damon". Politico. பார்க்கப்பட்ட நாள் 2014-06-30.
  8. Goldstein, Barbara Ross, Sasha. "CNN correspondent Arwa Damon apologizes after lawsuit claimed she bit 2 medics in drunken rage at U.S. Embassy in Baghdad". nydailynews.com. பார்க்கப்பட்ட நாள் September 14, 2020.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  9. "CNN Sued Over Correspondent Who Bit EMTs in Drunken Rage". TMZ. பார்க்கப்பட்ட நாள் September 14, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அர்வா டாமன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்வா_டாமன்&oldid=3718493" இலிருந்து மீள்விக்கப்பட்டது