அருணா சாயிராம்
அருணா சாயிராம் | |
---|---|
பிறப்பு | 12 மே 1960 (அகவை 64) மும்பை |
பாணி | கருநாடக இசை |
இணையம் | http://www.arunasairam.org |
அருணா சாயிராம் தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க கருநாடக இசைப் பாடகர்களுள் ஒருவர்.
இசைப் பயிற்சி
[தொகு]அருணா சாயிராம் மும்பையில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து டி. பிருந்தா இசையினைக் கற்பித்தார். மும்பையில் தனது இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.[1]
கலை வாழ்க்கை
[தொகு]இந்தியாவில் உள்ள எல்லா பெரிய சபைகளிலும் அருணா சாயிராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகின் பல இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அருணாவுக்கு காயத்ரி, மைத்ரேயி என இரு மகள்கள் உள்ளனர்.[2] மைத்ரேயி (1974-2020) தனது 45 வயதில் சியாட்டிலில் புற்றுநோயால் இறந்தார்.[3]
- பத்மஸ்ரீ விருது
- சங்கீத சூடாமணி விருது, 2006 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 2009. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]
- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2012
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[6]
- செவாலியே விருது [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அருணா சாயிராம் உடனான நேர்காணல்
- ↑ "Gayathri Sairam's grand wedding reception". டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 ஜூலை 2011. https://timesofindia.indiatimes.com/entertainment/events/chennai/gayathri-sairams-grand-wedding-reception/articleshow/9134900.cms.
- ↑ Maitreyi Krishnaswamy 1974 - 2020 21 நவம்பர் 2022
- ↑ http://dinamani.com/music/article1312021.ece
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 திசம்பர் 2018. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2018.
- ↑ "SNA Awardeeslist". Archived from the original on 2018-03-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.
- ↑ "பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/890641-carnatic-vocalist-aruna-sairam-selected-for-french-government-s-chevalier-award.html. பார்த்த நாள்: 2 November 2022.