உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, பருகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, பருகூர்
வகைமகளிருக்கான அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1993
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. மணிமொழி
அமைவிடம், ,
இணையதளம்http://www.gascwbgr.org/

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, பருகூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தின் பருகூரில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1993ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[4]முனைவர் சி. மணிமொழி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

வரலாறு

[தொகு]

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூரில் 1993 செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது. கல்லூரியைத் தொடங்கி நடத்திட அரசு, கே. கருப்பன் என்பவரை நியமித்தது. தொடக்கத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 1999 - 2000 கல்வியாண்டில் இருந்து பர்கூரில் இருந்து, சென்னை நெடுஞ்சாலை 4 கி.மீ தொலைவில் ஒப்பத்தவாடி ஊராட்சிக்குட்பட்ட அங்கினாயனபள்ளி சிற்றூரில் 9.6 ஏக்கர் பரப்பளவு கொண்ட சொந்த கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது இக்கல்லூரி 28 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள், ஒரு பொது நூலகம், ஒரு மின் நூலகத்துடன் செயல்படுகிறது. 2003 ஆவது ஆண்டு முதல் சுயநிதி பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.[6]

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமலர் கல்விமலர்
  2. Colleges in Tamil Nadu
  3. Colleges-in-Tamilnadu
  4. Periyar University
  5. "பர்கூர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2017-05-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
  6. "கல்லூரி வரலாறு". Archived from the original on 2017-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

இதனையும் காண்க

[தொகு]