அயோடின் சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அயோடின்(III) சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I2(SO4)3 | |
தோற்றம் | இளம் மஞ்சள் நிறப் படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடின் சல்பேட்டு (Iodine sulfate) என்பது I2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினும் கந்தக அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அயோடின் சல்பேட்டு இள மஞ்சள் நிறத்தில் படிகங்களாகக் காணப்படும். தண்ணீருடன் வினைபுரியும்.[1]
தயாரிப்பு
[தொகு]ஈரயோடோசில் சல்பேட்டு சேர்மத்துடன் கந்தக டிரையாக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து அயோடின் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.:[2][3][4]
- (IO)2SO4 + 2SO3 -> I2(SO4)3
தனிமநிலை அயோடின், அயோடின் பெண்டாக்சைடு ஆகியவை கந்தக டிரையாக்சைடுடன் வினைபுரிந்தாலும் அயோடின் சல்பேட்டு உருவாகும்.[5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இளம் மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக அயோடின் சல்பேட்டு உருவாகிறது.[2][3][6]
வேதிப் பண்புகள்
[தொகு]அயோடின் சல்பேட்டு கரிமக் கரைப்பான்களில் கரையும்.[3] நீரற்ற மற்றும் வலுவான அமில கரைப்பான்களில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[6] வளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கின் கீழ் இது அயோடின் வெளியீட்டின் காரணமாக கருமையாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kasumov; Koz'min; Zefirov (1997). "Chemistry of inorganic sulfonates and sulfates of polyvalent iodine". Russian Chemical Reviews 66 (10): 843-857. doi:10.1070/RC1997v066n10ABEH000282.
- ↑ 2.0 2.1 2.2 Fichter; Kappeler (1915). "Neue Beobachtungen an Jodisalzen". ZAAC 91: 134-144. doi:10.1002/ZAAC.19150910109.
- ↑ 3.0 3.1 3.2 Argument, Cyril (1944). "The iodous sulphates". Durham theses (Durham University). https://etheses.dur.ac.uk/9113/. "According to the equation: (IO)2SO4 + 2SO3 = I2(SO4)3 ... the yellow crystals could be isolated. They showed properties typical of a neutral iodine salt, being specially sensitive to moisture. [Fichter et al.] showed that the compound was mainly neutral iodine sulphate I2(SO4)3 ... the neutral salts have a much lighter yellow colour[,] a greater solubility in organic liquids and a greater sensitivity to water.".
- ↑ Selte, Kari; Kjekshus, Arne (1971). "Iodine Oxides. Part IV. Solid Compounds Formed in the Systems H2O—SO3—I2On (n=3, 4, and 5)". Acta Chem. Scand. 25 (2): 751-752. doi:10.3891/acta.chem.scand.25-0751.
- ↑ Lehmann, Hans-Albert; Hesselbarth, Heinz (1959). "Zur Chemie des Schwefeltrioxyds. XI. Zur Kenntnis der SO3-Verbindungen des J2O5 und J2O4". ZAAC 299 (1-2): 51-57. doi:10.1002/zaac.19592990107.
- ↑ 6.0 6.1 Kraszkiewicz, Lukasz; Skulski, Lech (2008). "Facile Syntheses of Symmetrical Diaryliodonium Salts from Various Arenes, with Sodium Metaperiodate as the Coupling Reagent in Acidic Media". Synthesis 15: 2373-2380. doi:10.1055/s-2008-1067169.