உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ரா அயோடின் நோனாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ரா அயோடின் நோனாக்சைடு
இனங்காட்டிகள்
73560-00-6
InChI
  • InChI=1S/I4O9/c5-1(6)11-4(12-2(7)8)13-3(9)10
    Key: IQQBBNVVZPXURM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=I(=O)OI(OI(=O)=O)OI(=O)=O
பண்புகள்
I4O9
வாய்ப்பாட்டு எடை 651.61 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்[1]
உருகுநிலை 75 °செல்சியசு (சிதைவடையும்)[1]
reacts
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெட்ரா அயோடின் நோனாக்சைடு (Tetraiodine nonoxide) என்பது I4O9 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அயோடின் ஆக்சைடு சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

கார்பன் டெட்ராகுளோரைடில் உள்ள அயோடின் மற்றும் ஓசோனை −78 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ரா அயோடின் நோனாக்சைடை உருவாக்கலாம்.:[2][3]

2I2 + 9 O3 → I4O9 + 9O2

அயோடிக் அமிலத்துடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினல் டெட்ரா அயோடின் நோனாக்சைடு உருவாகிறது.:[4]

8 HIO3 → 2 I4O9 + 4 H2O + O2

பண்புகள்

[தொகு]

டெட்ரா அயோடின் நோனாக்சைடு வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திடப்பொருளாகக் காணப்படுகிறது. எளிதில் நீராற்பகுப்பு வினைக்கு உட்படும். 75 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்.[2]

4 I4O9 → 6 I2O5 + 2 I2 + 3 O2

ஈரயோடின் டெட்ராக்சைடைப் போலவே, டெட்ரா அயோடின் நோனாக்சைடும் I(III) மற்றும் I(V) இரண்டு சேர்மங்களையும் கொண்டுள்ளது, மேலும் கார நிலைமைகளின் கீழ் அயோடேட்டு மற்றும் அயோடைடுகளாக விகிதாசாரமற்று மாறுகிறது.[2]

3I4O9 + 12 HO → I + 11 IO3 + 6 H2O

டெட்ரா அயோடின் நோனாக்சைடு தண்ணீருடன் வினையில் ஈடுபட்டு அயோடிக் அமிலத்தையும் அயோடினையும் கொடுக்கிறது:[3]

4 I4O9 + 9 H2O -> 18 HIO3 + I2

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL. p. 500. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மைய எண் 759865801.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. 2.0 2.1 2.2 Holleman, A. F.; Nils, Wiberg; Wiberg, Egon (2019). Lehrbuch der anorganischen Chemie (in ஜெர்மன்). Berlin. p. 443. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-083817-6. இணையக் கணினி நூலக மைய எண் 1102802853.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. 3.0 3.1 Garg, Ragni; Singh, Randhir (2015). Inorganic Chemistry. New Delhi: McGraw-Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-259-06285-8. இணையக் கணினி நூலக மைய எண் 965462199.
  4. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry V1. Burlington: Elsevier Science. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-16127-5. இணையக் கணினி நூலக மைய எண் 843200092.