அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
அசோகரின் சாரநாத் சிறு தூண் கல்வெட்டு | |
செய்பொருள் | மணற்கல் |
---|---|
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இந்தியா, நேபாளம் |
அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள் (Minor Pillar Edicts) பேரரசர் அசோகர் வட இந்தியாவின் சாரநாத், சாஞ்சி, கௌசாம்பி மற்றும் நேபாளத்தில் லும்பினி மற்றும் நிகாலி சாகர் ஆகிய நகரங்களில் நிறுவிய 5 சிறிய தூண் கல்வெட்டுகளாகும். [1]
இக்கல்வெட்டுக்கள் அசோகரின் ஆட்சிக் காலமமான கிமு 262 - கிமு 233 இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்டது.[2] பிராமி எழுத்துகளைக் கொண்டு பிராமிருத மொழியில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு ஆணைகளை ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.[1]
அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகளின் பட்டியல்
[தொகு]கௌசாம்பியில் உள்ள அசோகரின் இராணியின் கல்வெட்டில், கௌதமபுத்தரிடமிருந்து பெற்ற அருளுக்காக இராணி பாரட்டப்பட வேண்டும் எனக்குறித்துள்ளார்.
- லும்பினி தூண் கல்வெட்டு
கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தின் லும்பினி நகரத்திற்கு அசோகர் வருகை தந்தது குறித்து லும்பினி சிறு தூண் கல்வெட்டில் பொறித்துள்ளார்.
- நிகாலி சாகர் கல்வெட்டு
நேபாள நாட்டில் நிகாலி சாகர் எனுமிடத்தில் அசோகரின் சிறு தூண் கல்வெட்டில் கௌதம புத்தருக்கு எழுப்பிய பெருந் தூபியின் கட்டுமானத்தை குறித்துள்ளார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Romila Thapar (1997). "Asoka and the Decline of the Mauryas" (PDF). Columbia University. Delhi: Oxford University Press. Archived from the original (PDF) on 17 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ "The Edicts of King Ashoka". Ven. S. Dhammika. Archived from the original on 14 March 2007. பார்க்கப்பட்ட நாள் 15 March 2007.