அகாதிர் (குதிர்)

அகாதிர் (Agadir) அல்லது இகௌதர் என்பது மொராக்கோவில் காணப்படும் உலகின் பழைமையான ஒரு பலப்படுத்தப்பட்ட தானியக் குதிராகும்[1][2]
மொராக்கோவில், அகாதிர் பொதுவாக அட்லசு மலைத்தொடர் மற்றும் திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் காணப்படுகின்றன.[3] அவற்றில் சில 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[4] தெற்கு தூனிசியாவிலும் இந்தக் கட்டமைப்புகள் பொதுவானவை. அங்கு அவை கஸ்பா அல்லது கோர்பா என்று குறிப்பிடப்படுகின்றன.[3] அல்சீரியாவில், இவை ஒரு காலத்தில் ஆரஸ் மலைகளில் பொதுவானவையாக இருந்தன. அங்கு அவை கலா என்று அழைக்கப்பட்டன. ஆனால் இவை 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணாமல் போகும் நிலையில் இருந்தன.[3]
விளக்கம்
[தொகு]இந்த கட்டமைப்புகள் பொதுவாக ஒரு தானியக் களஞ்சியமாகவும் மற்றும் ஒரு கோட்டையாகவும் இருந்தன. மேலும் சுற்றியுள்ள பண்ணைகள் மற்றும் கால்நடைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உயரமான பாறைகளில் அமைந்துள்ளன.[4] மொராக்கோவில், அவை பொதுவாக நொறுக்கப்பட்ட மண் அல்லது உலர்ந்த கல் கட்டுமானத்தால் கட்டப்பட்டன. உலர்ந்த கல்லில் கட்டப்பட்ட சில பெரிய கட்டமைப்புகள் குறுகிய உள் சந்துகளில் அமைக்கப்பட்ட பல மாடி கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பலகையும் அறை போன்ற வரிசையால் ஆனது. மேல் அறைகள் வெளிப்புறத்திலிருந்து முகப்பில் செருகப்பட்ட நீண்ட கற்கள் வழியாக அணுகப்படுகின்றன.[3] உயர் அட்லஸ் பிராந்தியத்தில் ராம்ட்-பூமி கட்டுமானங்கள் மிகவும் பொதுவானவை. அங்கு அகாதிர்களின் வடிவமைப்பு பிராந்தியத்தின் பாரம்பரிய வீடுகளை ஒத்திருக்கிறது. சில நேரங்களில் சுடாத செங்கற்கள் மூலம் வெளிப்புற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.[3] தெற்கு துனிசியாவிலும் பல நிலை கட்டமைப்புகள் அறியப்படுகின்றன. அங்கு அவை கோர்பா என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும் இன்று ஒரு சில மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை நான்கு மாடிகள் வரை ஒன்றுக்கொன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ள அறை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் நுழைவாயில்கள் அனைத்தும் உள் முற்றம் அல்லது பிரதான அவையை எதிர்கொள்கின்றன.[3]
படக்காட்சி
[தொகு]-
இகௌன்டா அகாதிர்
-
சிதி மௌசா அகாதிர், மொராக்கோ
-
இனௌமர் அகாதிர், மொராக்கோ
-
ஐசா அகாதிர், மொராக்கோ
-
கோர்பா, தூனிசியா
அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கு கூடுதலாக, மொராக்கோவின் தெற்கே உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் அமாஜிக் சமூகங்கள் இந்த கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் , பணம், நகைகள், ஆடை, தரைவிரிப்புகள் மற்றும் சில நேரங்களில் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான மதிப்புமிக்க உடமைகளையும் சேமித்து வைப்பார்கள்.[5] பாரம்பரியமாக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவலர்களும் பணியமர்த்தப்பட்டனர். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Greniers collectifs - Patrimoine de l'Anti Atlas au Maroc | Holidway Maroc". Holidway (in பிரெஞ்சு). 2017-02-28. Retrieved 2020-04-06.
- ↑ "Collective Granaries, Morocco". Global Heritage Fund (in அமெரிக்க ஆங்கிலம்). 12 May 2018. Retrieved 2020-04-06.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Golvin, Lucien (1989). "Architecture berbère". Encyclopédie berbère. Retrieved 11 September 2023.
- ↑ 4.0 4.1 Raffaelli, Giuliana; Robles Marín, Pedro; Guerrera, Francesco; Martín Martín, Manuel; Alcalá-García, Francisco Javier; Amadori, Maria Letizia; Asebriy, Lahcen; El Amrani, Iz-Edine et al. (June 2016). "Archaeometric study of a typical medieval fortified granary (Amtoudi Agadir, Anti-Atlas Chain, southern Morocco): a key case for the maintenance and restoration of historical monuments". Italian Journal of Geosciences 135 (2): 280–299. doi:10.3301/IJG.2015.25. http://www.italianjournalofgeosciences.it/244/fulltext.html?ida=552.
- ↑ "L'agadir, ancêtre du Makhzen marocain?". Zamane (in பிரெஞ்சு). 2018-06-12. Retrieved 2020-04-06.