நவம்பர் 22
Appearance
(22 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 22 (November 22) கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார்.
- 1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
- 1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.
- 1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.
- 1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
- 1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
- 1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36வது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
- 1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.
- 1977 – மீயொலிவேக கான்கோர்டு சேவையை பிரித்தானிய ஏர்வேஸ் இலண்டன் முதல் நியூயார்க் வரை ஆரம்பித்தது.
- 1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
- 1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.
- 1995 – சினாய் தீபகற்பம், சவூதி அரேபியா பகுதிகளில் 7.3 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில், 8 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
- 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 2003 – ஜோர்ஜியாவில் அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அரசுத்தலைவரைப் பதவி விலகுமாறு கோரினர்.
- 2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
- 2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
- 2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இசுரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
பிறப்புகள்
- 1830 – ஜல்காரிபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1858)
- 1839 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தமிழிசை அறிஞர் (இ. 1898)
- 1890 – சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (இ. 1970)
- 1898 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியல் அறிஞர் (இ. 1984)
- 1904 – மரே ராஜம், தமிழகத் தொழிலதிபர், பதிப்பாளர், கொடையாளர் (இ. 1986)
- 1904 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 2000)
- 1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
- 1943 – பில்லி ஜீன் கிங், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1954 – திண்டுக்கல் ஐ. லியோனி, ஆசிரியர், மேடைப் பேச்சாளர்
- 1958 – ஜேமி லீ குர்திஸ், அமெரிக்க நடிகை
- 1966 – சஞ்சய் காத்வி, இந்திய திரைப்பட இயக்குநர்
- 1967 – பொறிஸ் பெக்கர், செருமானிய-சுவிசு டென்னிசு வீரர்
- 1967 – மார்க் ருஃப்பால்லோ, அமெரிக்க நடிகர்
- 1968 – ரஸ்மஸ் லெர்டெர்ஃப், பி.எச்.பி நிரல் மொழியைக் கண்டுபிடித்தவர்
- 1969 – மர்ஜானே சத்ரபி, ஈரானிய எழுத்தாளர்
- 1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கைத் துடுப்பாளர்
- 1984 – ஸ்கார்லெட் ஜோஹான்சன், அமெரிக்க நடிகை
- 1986 – ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்
- 1990 – கார்த்திக் ஆர்யன், இந்திய நடிகர்
இறப்புகள்
- 1718 – பிளாக்பியர்ட், ஆங்கிலேயக் கடல் கொள்ளைக்காரன் (பி. 1680)
- 1774 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி. 1725)
- 1907 – ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (பி. 1829)
- 1944 – ஆர்த்தர் எடிங்டன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1882)
- 1963 – ஆல்டசு அக்சுலி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1894)
- 1963 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது அரசுத்தலைவர் (பி. 1917)
- 1967 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
- 1967 – தாரா சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1885)
- 1974 – ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1908)
- 1988 – ரேமாண்ட் டார்ட், ஆத்திரேலியத் தொல்லியலாளர். புதைபடிவ ஆய்வாளர் (பி. 1893)
- 1997 – தி. சதாசிவம், தமிழகப் பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1902)
- 2011 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- 2011 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1938)
- 2012 – பி. கோவிந்த பிள்ளை, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- 2015 – சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1949)
- 2016 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1930)
- 2016 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லெபனான், பிரான்சிடம் இருந்து 1943)
- ஆசிரியர் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 22 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்