சார்லஸ் டி கோல்
சார்லசு டி கோல் | |
---|---|
சுதந்திர பிரெஞ்சுப் படையின் தலைவர் | |
பதவியில் 18 சூன் 1940 – 3 சூலை 1944 | |
முன்னையவர் | மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசு |
பின்னவர் | பிரெஞ்சுக் குடியரசின் இடைக்கால அரசு |
பிரெஞ்சுக் குடியரசின் இடைக்கால அரசின் அதிபர் | |
பதவியில் 3 சூலை 1944 – 20 சனவரி 1946 | |
முன்னையவர் | பிலிப்பே Pétain (நாட்டுத் தலைவர்) பியரே லாவல் (பிரதமர்) |
பின்னவர் | பெலிக்சு கௌவின் |
பிரான்சின் பிரதம அமைச்சர் | |
பதவியில் 1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959 | |
குடியரசுத் தலைவர் | ரெனே கோட்டி |
முன்னையவர் | பியரி பிப்லிம்லின் |
பின்னவர் | மைக்கேல் டேபரே |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959 | |
குடியரசுத் தலைவர் | ரெனே கோட்டி |
பிரதமர் | சார்லசு டி கோல் |
முன்னையவர் | பியரி டி செவிக்னெ |
பின்னவர் | பியரி கியுல்லௌமட்டு |
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் | |
பதவியில் 8 ஜனவரி 1959 – 28 ஏப்ரல் 1969 | |
பிரதமர் | மைக்கேல் டேப்ரே (1959-1961) ஜார்ஜ் பொம்பிடூ (1962-1968) மௌரிசு கௌவ் டி முர்வில்லி (1968-1969) |
முன்னையவர் | ரெனே கோட்டி |
பின்னவர் | சியார்ச்சு பொம்பிடூ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லீலே | 22 நவம்பர் 1890
இறப்பு | 9 நவம்பர் 1970 கொலோம்பே-லெசு-டியுக்சு-எக்லிசெசு | (அகவை 79)
அரசியல் கட்சி | குடியரசுக்கான சனநாயகவாதிகள் ஒன்றியம் |
துணைவர் | யுவோனி டி கோல் |
வேலை | படைத்துறை |
சார்லசு டி கோல் (Charles André Joseph Marie de Gaulle) எனப் பரவலாக அறியப்படும் சார்லசு அண்ட்ரே யோசப் மாரீ டி கோல் என்பவர் 22 நவம்பர் 1890 முதல் 9 நவம்பர் 1970 வரையிலான காலத்தில் வாழ்ந்த பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது சுதந்திர பிரான்சு படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார். பின்னர் ஐந்தாம் பிரெஞ்சுக் குடியரசை நிறுவிய இவர் அதன் முதல் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு இவராக பதவி விலகும் வரை இவர் அப்பணியிலேயே பணிபுரிந்தார். பனிப்போர் நிகழ்ந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு பிரெஞ்சு அதிபராக இவர் இருந்தார், அவருடைய நினைவுகள் பிரெஞ்சு அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.
பிரான்சிலுள்ள லீல் நகரத்தில் சார்லசு டி கோல் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இவர் பிரன்சின் புனித சியரில் உள்ள பிரெஞ்சு இராணுவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். முதல் உலகப் போரை அலங்கரித்த அதிகாரிகளுள் ஒருவராக சார்லசு இருந்தார், பல முறை காயமுற்றார், பின்னர் முதல் உலகப்போரில் நீண்ட நாட்கள் நடைபெற்றதாகக் கருதப்படும் வெர்துன் போரில் கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். போர் இடைக்காலத்தின்போது இயங்கும் ஆயுதமேந்திய படப்பிரிவினரை ஆதரித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். 1940 ஆம் ஆண்டு மே மாதத்தில் செருமன் நாடு படையெடுப்பு நடத்தி தாக்கியபோது, இவர் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்ட ஆயுதப் பிரிவை வழிநடத்தினார். பின்னர் அவர் யுத்தத்திற்கான சார்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். செருமனியின் நாசிப் படையினருடன் பிரெஞ்சு அரசாங்கத்தின் படைப்பிரிவு செல்வதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். டிசம்பர் 18 அன்று பிரெஞ்சு மக்களுக்கு விடுத்த அழைப்பில், பிரெஞ்சு ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுபட்டு சண்டையிடுமாறு மக்களை உற்சாகமூட்டினார். ஆக்ரமிப்பாளர்களை நாடு கடத்திட அரசாங்கத்திடம் போராடினார். அவர்களுக்கு எதிராக சுதந்திர பிரெஞ்சு படைகள் போராட்டத்தை ஆதரித்தார். பிரிட்டனுடனும், குறிப்பாக அமெரிக்காவுடனும் நெருங்கிய உறவு இருந்தபோதிலும், பிரெஞ்சு எதிர்ப்பின் மறுக்க முடியாத தலைவராக அவர் தோன்றினார். பிரான்சு விடுதலையடைந்ததைத் தொடர்ந்து சூன் 1944 இல் உருவான பிரெஞ்சு குடியரசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரானார், புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இக்கொள்கை பிரான்சில் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு நீடித்தது. நாடு பொருளாதார முன்னேற்றத்தையும் கண்டது.
புதிய நான்காவது குடியரசில் இருந்த சிறிய கூட்டணி திரும்பியதன் விளைவாக இவர் விரக்தியடைந்தார், எனவே 1946 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதவி விலகினார். ஆனால் உருசிய பொதுவுடமைக் கட்சியின் நிறுவனராக அரசியல் ரீதியாக தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டார், பிரெஞ்சு மக்களின் பேரணி என்பது இக்கட்சிப் பெயரின் பொருளாகும். அவர் 1950 களின் முற்பகுதியில் முற்றிலுமாக கட்சிப்பணிகளில் இடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது போர் அனுபவங்களைக் குறித்து போர் நினைவுகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார், அது விரைவில் நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் ஒரு முதல்தரமான இலக்கியமானது. அல்சீரியப் போர் நான்காம் குடியரசைத் தகர்த்த காரணத்தால் தேசிய சட்ட மன்றம் மே 1958 நெருக்கடியில் சார்லசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தது. ஒரு வலுவான குடியரசுத் தலைவராக இவர் ஐந்தாவது குடியரசை நிறுவினார். தொடர்ந்து இப்பதவிக்காகத் தேர்ந்தெடுக்கவும் பட்டார். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு பிரான்சை ஒன்றாக இணைத்துக் கொள்ள திட்டமிட்டார். அல்சீரியாவில் குடியேறிய பிரெஞ்சு கிறித்துவ மற்றும் யூதமக்கள் மற்றும் இராணுவத்தினரை ஒன்றிணைத்தார். இருவரும் காலனித்துவ ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னதாகவே இவர் மீண்டும் ஆட்சிக்குத் திரும்ப வேண்டுன் என விரும்பியவர்களாவர். அவர் அல்சூரியாவுக்கு சுதந்திரம் கொடுத்தார். பிற பிரெஞ்சு காலனிகளுக்கும் படிப்படியாக விடுதலை வழங்கினார்.
பனிப்போர் நடைபெற்ற சூழலில் டி கோல் தனது பெருந்தன்மை அரசியலை முன்னெடுத்தார். பிரான்சை ஒரு முக்கிய சக்தியாக நிலைநாட்டி, அமெரிக்கா போன்ற நாடுகள் அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக மற்ற நாடுகளில் தங்கியிருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். "தேசிய சுதந்திரம்" என்ற கொள்கையை பின்பற்றியே டி கோல் இந்த முடிவுக்கு வந்தார். இதனால் நேட்டோவின் இராணுவ ஒருங்கிணைவிலிருந்து விலகி, ஒரு சுயாதீனமான அணுசக்தி அபிவிருத்தி திட்டத்தை தொடங்குவதற்கு வழிகிடைத்தது. பிரான்சு நான்காவது அணு சக்தி நாடாக மாறியது. சனவரி 22, 1963 இல் எலிசே உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் ஆங்கிலோ-அமெரிக்கன் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்கு இடையேயான ஐரோப்பிய எதிர்ச்செயலை உருவாக்க அவர் இணக்கமான பிராங்கோ-செருமானிய உறவுகளை மீண்டும் நிலைநாட்டினார். இருப்பினும் ஒரு ஐரோப்பிய அரசின் இயல்புக்கு மீறிய எந்தவொரு வளர்ச்சியையும் அவர் எதிர்த்தார். வியட்நாமில் அமெரிக்க தலையீட்டையும், அமெரிக்க டாலரின் அசாதாரண சலுகைகளையும் டி கோல் வெளிப்படையாக விமர்சித்தார். கியூபெக்கின் சுதந்திரத்திற்கு ஆதரவு, ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தில் பிரிட்டனின் நுழைவுக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்காக இரண்டு வீட்டோ உரிமையைப் பயன்படுத்தியது வாழ்வின் பிற்பகுதியில் அவருக்கு ஆதரவையும் கணிசமான சர்ச்சையையும் உருவாக்கியது.
1965 ஆம் ஆண்டு மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், மே 1968 இல் அவர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அதிகாரத்தை இழக்க நேரிட்டது, ஆனால் இராணுவத்தின் ஆதரவுடன் நெருக்கடியைத் தகர்த்தெறிந்து சட்டமன்றத்தில் பெரும்பான்மை உயர்த்திக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். 1969 இல் பரவல்முறை விரிவாக்கத்தை முன்மொழிந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற பின்னர் அவர் பதவி விலகினார். ஓர் ஆண்டிற்குப் பின்னர் அவரது கொலம்பே-லெசு –டியூக்சு- எக்லிசசு இல்லத்தில் இறந்தார். அவரது நிறைவுறா குடியரசுத்தலைவர் நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். பல பிரெஞ்சு அரசியல் கட்சிகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தளபதி டி கோலைப் பின்பற்றுகின்றன.
மிகச்சிறந்த பிரெஞ்சு மனிதர் என்ற புகழுடன் சார்லசு டி கோல் காலங்கள் கடந்தும் வாழ்கிறார் [1].
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தோற்றமும் குழந்தைப்பருவமும்
[தொகு]சார்லசு டி கோல் லீலேயின் தொழிற்சாலைப் பகுதியில் வடக்குத் துறையில் பிறந்தார். அவரது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் இவர் மூன்றாவது குழந்தையாவார். ஒரு கத்தோலிக்க மற்றும் பாரம்பரிய குடும்பத்தில் டி கோல் வளர்ந்தார். அவரது தந்தை என்றி டி கோல் யெசுயூட் கல்லூரியில் வரலாற்று மற்றும் இலக்கியப் பேராசிரியராக பணியாற்றினார். இறுதியாக தனது சொந்த பள்ளியை நிறுவினார் [2]. பிரான்சின் நார்மண்டி மற்றும் பர்கண்டி பிராந்தியங்களிலிருந்து ஒரு நீண்ட நாடாளுமன்ற கெளரவ வரிசையில் வந்தவராக சார்லசு டி கோலின் தந்தையான என்றி டி கோல் கருதப்படுகிறார் [3][4]. இந்த பெயர் டச்சு போன்ற தோற்றம் கொண்டதாக கருதப்படுகிறது, மேலும் டச்சு மொழியிலிருந்து நன்கு வருவிக்கப்பட்டதாகவும் இருக்கலாம் [5]. டி கோலின் தாயார், யீனே, லீலேவில் உள்ள செல்வம் மிகுந்த ஒரு தொழில்முனைவோர் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். அவருடைய மூதாதையர்கள் பிரான்சு. அயர்லாந்து, இசுக்காட்லாந்து, நெதர்லாந்து, செருமனி நாடுகளில் இருந்துள்ளனர் [3][4].
பிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்ததால் குடும்பம் தனது நிலத்தின் பெரும்பகுதியை இழந்தது [6], டி கோலின் தந்தையார் தனது குழந்தைகளுக்கு உணவு நேரத்தில் வரலாறு மற்றும் தத்துவார்த்த விவாதங்களை ஊக்குவித்தார். அவரது ஊக்கமூட்டுதலால் டி கோல் இளம் வயதிலேயே பிரெஞ்சு வரலாற்றை நன்கு அறிந்து கொண்டார். 1870 ஆம் ஆண்டு செடனில் செருமானியர்களிடம் பிரஞ்சு சரணடைதலைப் பற்றி கேள்விப்பட்டபோது ஒரு தாயாக எப்படி இருந்தார் என்று அவரது தாயின் கதையைக் கேட்டதனால் இராணுவ தந்திரங்களில் டி கோல் ஆர்வம் காட்டினார். வரலாற்றாசிரியரும், உணர்ச்சிமிக்க செல்டிக் கலைஞருமான சார்லசு டி கோல் என்ற பெயரே கொண்ட அவருடைய மாமாவும் அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்ரால் இவரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.. டி கோலின் தாத்தா யூலியன் பிலிப்பேவும் ஒரு வரலாற்றாளர் ஆவர். பாட்டி யோசுபீன் மேரி ஒரு கவிஞராக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார் [7][8].
கல்வி மற்றும் அறிவு
[தொகு]சார்லசு டி கோலிக்கு பத்து வயதாக இருந்த போதே அவர் பிரான்சின் இடைக்கால வரலாற்றை படித்தார். அவரது பதின்வயது காலத்தில் அவர் சுயமாக எழுதத் தொடங்கினார். குறிப்பாக கவிதைகளில் தனது சொந்த எழுத்துக்களைத் அவர் தொடங்கினார், பின்னர் ஒரு பயணியைப் பற்றிய ஓரங்க நாடகம் எழுதச் சொல்லி அவரது குடும்பம் ஊக்குவித்து அதை தனிப்பட்ட முறையில் வெளியிட்டது. ஓர் உற்சாகமான வாசகரான் இவர் பெர்க்சன், பெகூய் மற்றும் பேரசு போன்ற எழுத்தாள தத்துவஞானிகளுக்கு ஆதரவளித்தார். செருமன் தத்துவவாதிகள் நீட்சே, கான்ட் மற்றும் கோத்தே ஆகியோரின் படைப்புகளுடன் அவர் பண்டைய கிரேக்கர்களின் படைப்புகளையும் மற்றும் புனைவியக் கவிஞர் சாட்டேபிரியண்ட்டின் நாவலையும் படித்தார் [9].
டி கோல் பாரிசில் உள்ள கல்லூரி சிடானிசுலாசு கல்லுரியில் படித்தார். சிறிது காலம் பெல்கியத்திலும் படித்தார், அங்கு வரலாற்றைப் படிப்பதில் பெரிதும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார், மேலும் பெருமளவில் அவரது நாட்டு மக்களின் சாதனைகளைப் புரிந்து கொண்டு பெருமைகளை பகிர்ந்து கொண்டார் [10]. பதினைந்து வயதில் இருந்தபோது டி கோல் "தளபதி டி கோல்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். 1930 இல் செருமனியை வெற்றிகொள்வதற்கு பிரெஞ்சு இராணுவத்தை வழிநடத்துவது எப்படி என்பதாக அக்கட்டுரை அமைந்திருந்தது. 1870 ஆம் ஆண்டின் பிரெஞ்சுத் தோல்வியை பழிவாங்க செருமனியில் தவிர்க்க முடியாத எதிர்கால போருக்கு சற்றே நேர்மையற்ற எதிர்பார்ப்புடன் அவர் தனது இளமைக் காலத்தில் முன்னோக்கி பார்த்துக்கொண்டிருந்தார் என்று பின்னர் எழுதினார் [11].
டி கோலின் பதின்பருவக் காலத்தில் பிரான்சு ஒரு பிளவுபட்ட சமுதாயமாக இருந்தது, இவர் குடும்பம் விரும்பாத பல முன்னேற்றங்கள் சமுதாயத்தில் இருந்தன. சமத்துவமும் பொதுவுடமையும் வளர்ச்சி கண்டன. 1905 இல் பேராலயத்தையும் அரசையும் சட்டரீதியாக பிரித்தலும், அதே ஆண்டில் இராணுவ சேவையின் காலவரையறை இரண்டு ஆண்டுகளாக குறைத்தலும் நிகழ்ந்தன. டீ கோல் அவரது பதின்பருவ வயது வரை ஒரு சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஆனால் சூலை 1906 ஆம் ஆண்டு முதல் அவர் பள்ளியில் கடினமாக உழைத்தார். இராணுவ அதிகாரியாகி இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் அவர் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். டி கோலை இராணுவத்தில் சேருமாறு லாகோடியூர் பரிந்துரைத்தார். எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியராக வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானவராக இருந்த போதிலும், அவரது தந்தைக்காகவும் பிரெஞ்சு சமுதாயத்திற்காகவும் இது தேவையென அவர் கருதினார்.டி கோல் இராணுவத்தில் சேர்ந்த பிறகு இதை நினைவு கூர்ந்தார் [12].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://tempsreel.nouvelobs.com/actualites/20050405.OBS3037/?xtmc=&xtcr=1
- ↑ Fenby, Jonathan. The General: Charles de Gaulle and The France He Saved (2010) pp. 42–47
- ↑ 3.0 3.1 Crawley, Aidan (1969). De Gaulle. London: The Literary Guild. pp. 13–16. அமேசான் தர அடையாள எண் B000KXPUCK.
- ↑ 4.0 4.1 Ledwidge p. 6
- ↑ Fenby 2010, p42
- ↑ Fenby p 41
- ↑ David Schoenbrun, The Three Lives of Charles de Gaulle (1966)
- ↑ Fenby, pp 42–47
- ↑ Alan Pedley (1996) As Mighty as the Sword: A Study of the Writings of Charles de Gaulle. pp. 170-72. Intellect Books; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0950259536.
- ↑ Fenby, pp 51–53
- ↑ Lacouture 1991, p13
- ↑ Lacouture 1991, pp14-15
புற இணைப்புகள்
[தொகு]- Fondation Charles-de-Gaulle
- ஆக்கங்கள் சார்லஸ் டி கோல் இணைய ஆவணகத்தில்
- சார்லஸ் டி கோல் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Mémorial Charles de Gaulle
.