உள்ளடக்கத்துக்குச் செல்

2024 சூரத் கட்டட விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 சூரத் கட்டட விபத்து
நாள்சூலை 6, 2024 (2024-07-06)
அமைவிடம்சூரத்து, குசராத்தி
காரணம்கட்டட விபத்து
இறப்புகள்7
காயமுற்றோர்15

2024 சூரத் கட்டட விபத்து (2024 Surat building collapse) என்பது சூலை 6 2024 அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, இந்திய மாநிலமான குசராத்தில் சூரத்தின் புறநகரில் ஒரு குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த நிகழ்வாகும். இதில் 7 பேர் உயிரிழந்தனர், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவம்

[தொகு]

6 சூலை 2024 அன்று இந்திய நேரப்படி 14:30 மணிக்கு, குசராத்தின் சூரத்தின் புறநகரில் ஒரு குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது.[1] இச்சம்பவத்தில் கனமழையால் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.[2] இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.[3]

பின்விளைவு

[தொகு]

தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[4] இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி அடுத்த நாளும் தொடர்ந்தது.[5]

விசாரணை

[தொகு]

அரசு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 2017ஆம் ஆண்டு இந்தக் கட்டடம் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இக்கட்டத்தில் ஐந்து குடும்பத்தினர் வசித்து வந்தனர்.[1] இக்கட்டட உரிமையாளர்கள் மீது பாரதிய நீதி விதித்தொகுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Surat Building That Collapsed Killing 7 Was Built Illegally In 2017". NDTV. 7 July 2024. https://www.ndtv.com/india-news/7-killed-in-surat-building-collapse-bodies-pulled-out-of-debris-overnight-6050985. 
  2. "Surat disaster: 7 found dead in rubble of collapsed 6-storey building, more feared trapped". Business Today. 7 July 2024. https://www.businesstoday.in/india/story/surat-disaster-7-found-dead-in-rubble-of-collapsed-6-storey-building-more-feared-trapped-436136-2024-07-07. 
  3. 3.0 3.1 "Surat building collapse: Death toll climbs to 7; building owner, son booked". இந்தியன் எக்சுபிரசு. 7 July 2024. https://indianexpress.com/article/cities/ahmedabad/surat-building-collapse-live-updates-death-toll-rescue-ops-9437741/. 
  4. "7 dead in Surat building collapse, several trapped". இந்தியா டுடே. 7 July 2024 இம் மூலத்தில் இருந்து 7 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240707024348/https://www.indiatoday.in/india/story/surat-building-collapse-death-toll-many-trapped-rescue-operations-ndrf-sdrf-2563368-2024-07-07. 
  5. "Surat building collapse: Seven killed as rescue operation underway". தி இந்து. 7 July 2024 இம் மூலத்தில் இருந்து 6 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240706164604/https://www.thehindu.com/news/national/gujarat/six-storey-residential-building-collapses-in-surat-city-rescue-operations-on/article68375409.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2024_சூரத்_கட்டட_விபத்து&oldid=4098943" இலிருந்து மீள்விக்கப்பட்டது