உள்ளடக்கத்துக்குச் செல்

2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
இந்தியா
இந்தியக் கொடி
ப.ஒ.கு குறியீடுIND
தே.ஒ.குஇந்திய ஒலிம்பிக் சங்கம்
இணையதளம்olympic.ind.in
பாரிசு, பிரான்சு
சூலை 26, 2024 (2024-07-26) – 11 ஆகத்து 2024 (2024-08-11)
போட்டியாளர்கள்117 - 16 விளையாட்டுகளில்
கொடி தாங்கியவர்சரத் கமல் மற்றும் பி. வி. சிந்து
பதக்கங்கள்
தங்கம்
0
வெள்ளி
1
வெண்கலம்
5
மொத்தம்
6
Summer Olympics appearances

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா (India at the 2024 Summer Olympics) 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆகத்து மாதம் 11 ஆம் தேதி வரை பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடுகிறது. 1900 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா அறிமுகமானது. 1920 ஆம் ஆண்டு முதல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் தோன்றியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவின் 26 ஆவது தோற்றத்தைக் குறிக்கிறது.[1]

பின்னணி

[தொகு]

இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது,[2]

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகச் சென்றுள்ள இந்திய அணியில் 117 போட்டியாளர்கள் உள்ளனர்.[3] (110 போட்டியாளர்கள் மற்றும் 7 மாற்று வீரர்கள்). இவர்களுடன் கூடுதலாக 118 துணைப் பணியாளர்கள் மற்றும் 22 அதிகாரிகள் இருக்கின்றனர்.[4][5] ககன் நரங் சமையல்காரராகவும், சிவ கேசவன் துணைவராகவும் நியமிக்கப்பட்டனர்.[6] தொடக்க விழாவிற்கு பி.வி.சிந்து மற்றும் சரத் கமல் ஆகியோர் கொடி ஏந்தியவர்களாக இருந்தனர்.[7]

போட்டியாளர்கள்

[தொகு]

ஒவ்வொரு விளையாட்டுக்குமான போட்டியாளர்களின் எண்ணிக்கை கீழே உள்ளது

போட்டி ஆண் பெண் தடகளம்
வில்வித்தை 3 3 6
தடகளம் 17 10 27
இறகுப்பந்தாட்டம் 4 3 7
குத்துச்சண்டை 2 4 6
குதிரையேற்றம் 1 0 1
வளைதடிப் பந்தாட்டம் 16 0 16
குழிப்பந்தாட்டம் 2 2 4
யுடோ 0 1 1
படகோட்டுதல் 1 0 1
பாய்மரப் படகோட்டம் 1 1 2
துப்பாக்கி சுடுதல் 10 11 21
நீச்சற் போட்டி 1 1 2
மேசைப்பந்தாட்டம் 3 3 6
டென்னிசு 3 0 3
பளு தூக்குதல் 0 1 1
மற்போர் 1 5 6
மொத்தம் 65 45 110

பதக்கங்களின் விவரம்

[தொகு]
விளையாட்டுப் போட்டிகள் வாரியாக பதக்கங்கள்
விளையாட்டுப் போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
குறி பார்த்துச் சுடுதல் 0 0 3 3
மொத்தம் 0 0 3 3
நாள் வாரியாக பதக்கங்கள்
நாள் தேதி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 27 சூலை 0 0 0 0
2 28 சூலை 0 0 1 1
3 29 சூலை 0 0 0 0
4 30 சூலை 0 0 1 1
5 31 சூலை 0 0 0 0
6 1 ஆகத்து 0 0 1 1
மொத்தம் 0 0 3 3
பாலினம் அடிப்படையில் பதக்கங்கள்
பாலினம் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
பெண் 0 0 1 1
ஆண் 0 0 1 1
கலவை 0 0 1 1
மொத்தம் 0 0 3 3

பதக்கம் பெற்றவர்கள்

[தொகு]
பதக்கம் பெயர் விளையாட்டுப் போட்டி நிகழ்வு தேதி
3 வெண்கலம் மனு பாக்கர் குறி பார்த்துச் சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி 28 சூலை
3 வெண்கலம் மனு பாக்கர்
சரப்ஜோத் சிங்
குறி பார்த்துச் சுடுதல் கலப்பு 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி (அணி) 30 சூலை
3 வெண்கலம் சுவப்னில் குசலே குறி பார்த்துச் சுடுதல் ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி, 3 நிலைகள்
ஒன்றிற்கு மேற்பட்ட பதக்கம் பெற்றவர்கள்
பெயர் நிகழ்வு 1st 2nd 3rd Total
மனு பாக்கர் குறி பார்த்துச் சுடுதல் 0 0 2 2

மேற்கோள்கள்

[தொகு]
  1. "India at the Olympics". Olympedia. Archived from the original on 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  2. "India – National Olympic Committee (NOC)". பன்னாட்டு ஒலிம்பிக் குழு. Archived from the original on 26 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2024.
  3. "ஒலிம்பிக்ஸ் 2024: விண்ணை அலங்கரித்த ராட்சத பலூன், இந்தியாவின் 117 வீரர்கள் - சுவாரஸ்ய நிகழ்வுகள்". பிபிசி தமிழ் செய்திகள். https://www.bbc.com/tamil/articles/cv2gqlylyzvo. பார்த்த நாள்: 27 July 2024. 
  4. Participation of Indian contingent in Olympics Games 2024 to be held at Paris, France from 26th July to 11th August 2024 (PDF) (Report). Ministry of Youth Affairs & Sports, Government of India. 16 July 2024. Archived from the original (PDF) on 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
  5. seo, raval (25 July 2024). "india-at-the-paris-olympic-games-2024-a-deep-dive-into-the-contingent/". Taza news இம் மூலத்தில் இருந்து 25 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240725184917/https://www.tazanewsz.com/india-at-the-paris-olympic-games-2024-a-deep-dive-into-the-contingent/. 
  6. "Gagan Narang Says 'Indian Athletes' Confidence has Reached New High'". News18. 25 July 2024 இம் மூலத்தில் இருந்து 25 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240725185020/https://www.news18.com/olympics/paris-olympics-2024-gagan-narang-says-indian-athletes-confidence-has-reached-new-high-8978621.html. 
  7. "Who is opening ceremony flag bearers". First Post. 24 July 2024 இம் மூலத்தில் இருந்து 24 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240724225337/https://www.firstpost.com/sports/india-paris-olympics-2024-who-is-opening-ceremony-flag-bearers-13796598.html.