2022 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்தும் நகரம் | குசராத்து, இந்தியா |
---|---|
பங்கேற்கும் அணிகள் | 37 (எதிர்பார்ப்பு) |
பங்கேற்கும் போட்டியாளர்கள் | 7000 (எதிர்பார்ப்பு) |
நிகழ்ச்சிகள் | 30 |
துவக்க விழா | 27 செப்டம்பர் 2022 |
நிறைவு விழா | 10 அக்ட்டோபர் 2022 |
Main venue | நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது |
2022 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 National Games of India) இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 36 ஆவது பதிப்பாகும். குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதாபாத்து, காந்திநகர், சூரத்து, வடோதரா, ராச்கோட்டு மற்றும் பவநகர் ஆகிய இடங்களில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.[1][2] குசராத்து 2022 என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
பங்கேற்கும் அணிகள்
[தொகு]இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் எட்டு ஒன்றியப் பிரதேசங்களில் இருந்தும் இந்திய ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியிலிருந்தும் அணிகள் இப்போட்டிகளுக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்றியப் பிரதேசங்களான லடாக், தாத்ரா நகர் அவேலி மற்றும் தியூ தாமன் ஆகியவையும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, போடோலாந்து பிராந்தியப் பகுதிக்கு தேசிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டது. எனவே போடோலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியும் இந்த விளையாட்டுகளில் பங்கேற்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- ஆந்திரப் பிரதேசம்
- அருணாசலப் பிரதேசம்
அசாம்
பீகார்
- சண்டிகர்
சத்தீசுகர்
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ
தில்லி
- கோவா (மாநிலம்)
குசராத்து
அரியானா
- இமாச்சலப் பிரதேசம்
சம்மு காசுமீர்
சார்க்கண்டு
கருநாடகம்
கேரளம்
லடாக்
- இலட்சத்தீவுகள்
மத்தியப் பிரதேசம்
மகாராட்டிரம்
- மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
- நாகாலாந்து
ஒடிசா
புதுச்சேரி
பஞ்சாப்
ராஜஸ்தான்
இந்திய ஆயுதப்படை கட்டுப்பாட்டு வாரியம்
சிக்கிம்
தமிழ்நாடு
- தெலங்காணா
திரிபுரா
- படிமம்:..Uttar Pradesh Flag(INDIA).png உத்தரப் பிரதேசம்
- உத்தராகண்டம்
மேற்கு வங்காளம்
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
[தொகு]- அகமதாபாத்து, காந்திநகர், சூரத், வடோதரா, ராச்கோட்டு மற்றும் பவநகர் ஆகிய நகரங்களில் விளையாட்டுகள் நடைபெறும்.
- தொடக்கம் மற்றும் முடிவு விழாக்கள் குசராத்து மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடைபெறுகின்றன.[3]
விளையாட்டுகள்
[தொகு]தடகளப் போட்டிகள், வளைதடிப் பந்தாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், தென்னிசு, மேசைப்பந்தாட்டம், யுடோ, மற்றும் சடுகுடு, கோ-கோ, மல்லர் கம்பம், யோகாசனம் போன்ற விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://olympics.com/en/news/national-games-2022-start-date-venue-announced
- ↑ "National Games 2022: Gujarat set to host National Games from September 27". www.insidesport.in. July 8, 2022.
- ↑ "36th National Games: Gujarat To Host 'Olympics of India' in September-October 2022 - Indian Olympic Association". Nextbulletin.com. 8 July 2022. Archived from the original on 24 செப்டம்பர் 2022. Retrieved 21 ஆகஸ்ட் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)