1875
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1875 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1875 MDCCCLXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1906 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2628 |
அர்மீனிய நாட்காட்டி | 1324 ԹՎ ՌՅԻԴ |
சீன நாட்காட்டி | 4571-4572 |
எபிரேய நாட்காட்டி | 5634-5635 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1930-1931 1797-1798 4976-4977 |
இரானிய நாட்காட்டி | 1253-1254 |
இசுலாமிய நாட்காட்டி | 1291 – 1292 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 8 (明治8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2125 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4208 |
1875 (MDCCCLXXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 12 - குவாங் சூ சீனாவின் பேரரசன் ஆனான்.
- பெப்ரவரி 24 - ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் பக்கல் மூழ்கியதில் பல உயர் அதிகாரிகள் உட்பட 102 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 10 - சுவாமி தயானந்தா ஆரிய சமாசம் என்ற அமைப்பை பம்பாய் நகரில் ஆரம்பித்தார்.
- மே 7 - சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க் உடன்பாடு (1875) எட்டப்பட்டது.
- ஜூலை - யாழ்ப்பாணத்தில் குடியேறிய தொழிலாளர்களிடையே காலரா நோய் பரவியதில் 500 பேர் வரை இறந்தனர்.
- ஆகஸ்ட் 25 - கப்டன் மத்தியூ வெப் என்பவர் ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் நீந்திக்கடந்த பெருமையைப் பெற்றார்.
- செப்டம்பர் 7 - எதியோப்பியா மீதான எகிப்திய முற்றுகை தோல்வியடைந்தது.
- அக்டோபர் 30 - ஹெலெனா பிளேவட்ஸ்கி பிரும்மஞான சங்கத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்தார்.
- நவம்பர் - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் பரவியது.
- டிசம்பர் 1 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட்) கொழும்பு வந்தார். டிசம்பர் 8 ஆம் நாள் கொழும்பில் இருந்து புறப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- பனி வளைதடியாட்டம் முதன் முதலில் கனடாவில் விளையாடப்பட்டது.
- மும்பை பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
- சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜூலை 25 - ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)
- ஆகஸ்ட் 30 - சுவாமி ஞானப்பிரகாசர், பன்மொழிப் புலவர் (இ. 1947)
- அக்டோபர் 31 - சர்தார் வல்லப்பாய் படேல், விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)