சூலை
Appearance
(ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை (July) என்பது யூலியன், கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். உரோமைப் பேரரசின் இராணுவத் தளபதி கிமு 44 இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (Quintilis) எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.[1]
இது சராசரியாக வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், கோடையின் இரண்டாவது மாதமுமாகும். தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், குளிர்காலத்தின் இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் சனவரி மாதத்திற்கு சமமான பருவமாகும்.
சூலை சின்னங்கள்
- சூலையின் பிறப்புக்கல் மாணிக்கம் ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
- இதன் பிறப்பு மலர்கள் இலார்க்சுபர் அல்லது நீர் அல்லி ஆகும்.
- சூலையின் இராசி கடகமும் (சூலை 22 வரை), சிம்மமும் (சூலை 23 முதல்) ஆகும்.[2]
சூலை மாத நிகழ்வுகள்
- சூலை 2, 1972 – இந்தியா-பாகித்தான் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சூலை 14, 1789 – பிரெஞ்சுப் புரட்சி முடிந்து பிரான்சு குடியரசு நாடானது.
- சூலை 18, 1947 – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.
- சூலை 15, 1955 – பாரத ரத்னா விருது முதன்முதலாக சவகர்லால் நேருக்கு வழங்கப்பட்டது.
- சூலை 17, 1897 – மார்க்கோனி தந்திக் குறியீடுகளை வானொலி அலைகள் மூலம் அனுப்பினார்.
- சூலை 17, 1996 – தமிழ்நாட்டின் தலைநகர் மதராசு என்பது சென்னை எனப்பெயர் மாற்றம் பெற்றது.
- சூலை 20, 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் ஆகும்.
- சூலை 21, 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையில் சிறிமா பண்டாரநாயக்கா பதவியேற்றார்.
- சூலை 20, 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்சுட்ராங், சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
- சூலை 24, 1983 – கறுப்பு சூலை:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
- சூலை 25, 1978 – உலகில் முதல் சோதனை குழாய் குழந்தை உருவான நாள்
- சூலை 26, 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
- சூலை 29, 1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
- சூலை 24, 2011 – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
- ↑ "Keeping Time: Months and the Modern Calendar". Live Science. 16 May 2014.
- ↑ "Astrology Calendar", yourzodiacsign. Signs in UT/GMT for 1950–2030.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர் |