1802
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1802 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1802 MDCCCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1833 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2555 |
அர்மீனிய நாட்காட்டி | 1251 ԹՎ ՌՄԾԱ |
சீன நாட்காட்டி | 4498-4499 |
எபிரேய நாட்காட்டி | 5561-5562 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1857-1858 1724-1725 4903-4904 |
இரானிய நாட்காட்டி | 1180-1181 |
இசுலாமிய நாட்காட்டி | 1216 – 1217 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 14Kyōwa 1 (享和元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2052 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4135 |
1802 (MDCCCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - இலங்கை சென்னை மாகாண ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு இங்கிலாந்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- மார்ச் 15 - இலங்கையின் அரச வர்த்தமானி முதன் முதலாக வெளியிடப்பட்டது.
- மார்ச் 27 - இலங்கையில் உள்ள அனைத்து டச்சு உடைமைகளையும் பிரித்தானியரிடம் கையளிக்கும் ஏமியன்சு உடன்பாடு (Treaty of Amiens) கையெழுத்திடப்பட்டது.
- மார்ச் 28 – எச். டபிள்யு. ஓல்பர்ஸ் என்பவர் பலாசு என்ற சிறுகோள் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 10 – இந்தியாவில் முதன் முதலாக பிரித்தானிய எல்லைகளை நிர்ணயிக்கும் பெரும் திரிகோண மதிப்பீடு (Great Trigonometric Survey of India) மதராசு மாகாணத்தில் ஆரம்பமானது.
- மே 20 – பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைத்தனத்தைக் கொண்டு வரும் சட்டமூலத்தை நெப்போலியன் பொனபார்ட் கொண்டு வந்தான்.
- சூன் 2 - ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்தை எதிர்த்த பழங்குடித் தலைவர் புமுல்வே என்பவர் ஹென்றி ஹாக்கிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஆகத்து 6 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி மயிலப்பன் சேர்வைகாரர் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 2 – சுவீடனுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் - பிரெஞ்சு இராணுவம் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தது.

நாள் அறியப்படாதவை
[தொகு]- உயிரியல் என்ற சொல்லை முதன் முதலில் டிரெவிரானசு என்பவர் பயன்படுத்தினார்.
- வெற்றிகரமான முதலாவது நீராவிக் கப்பலை வில்லியம் சிமிங்டன் என்பவர் நிர்மாணித்தார்.
- வியட்நாமில் நியூவென் வம்சம் அரசாளத் தொடங்கியது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஆகத்து 6 - மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி
1802 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christopher Hitchens, The Parthenon Marbles: The Case for Reunification (Verso Books, 2016)
- ↑ Coleman, Helen Turnbull Waite (1956). Banners in the Wilderness: The Early Years of Washington and Jefferson College. University of Pittsburgh Press. p. 206. கணினி நூலகம் 2191890. Archived from the original on November 11, 2012. Retrieved July 25, 2016.
- ↑ Carolyn E. Fick, The Making of Haiti: The Saint Domingue Revolution from Below (University of Tennessee Press, 1990) p210–211