உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்மிலன் பெயின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்மிலன் கவுர் பெயின்ஸ்
ஹர்மிலன் கவுர் பெயின்ஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு23 சூலை 1998 (1998-07-23) (அகவை 26)
பஞ்சாப், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)தடகளம்
பதக்கத் தகவல்கள்
மகளிர் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ 800 மீட்டர் ஓட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 ஹாங்சோ 1500 மீட்டர் ஓட்டம்

ஹர்மிலன் கவுர் பெயின்ஸ் (பிறப்பு 23 ஜூலை 1998) பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[1][2][3] இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய இந்திய தேசிய சாதனை படைத்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஹர்மிலன் கவுர் பெயின்ஸ். இவர் தனது பள்ளிப்படிப்பை மஹில்பூரில் உள்ள தோபா பப்ளிக் பள்ளியிலும், ஹோஷியார்பூரில் உள்ள செயின்ட் சோல்ஜர் பள்ளியிலும் பயின்றார். ஹர்மிலனின் பெற்றோர் இருவரும் விளையாட்டு வீரர்கள்.[4] இவரது தந்தை அமந்தீப் பெயின்ஸ் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பதக்கம் வென்றார் மற்றும் இவரது தாயார் மாதுரி சிங் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.[5] இவரது தாயார் 2003 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றவர். இவர் தர்மசாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். சுபோர்ட்ஸ்கீடா இணையதளத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தால் இவருக்கு ஆதரவளிக்கப்பட்டது.[6]

வாழ்க்கை

[தொகு]
  • 2023: ஹர்மிலன் 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[7][8]
  • 2023: புவனேஸ்வரில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
  • 2021: வாரங்கலில் நடந்த தேசிய ஓபன் சாம்பியன் போட்டியில் 2021 இல் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 4:05.39 வினாடிகளில் ஓடி, சுனிதா ராணியின் 2002 சாதனையான 4:06.03 ஐ அழித்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.[6]
  • 2021: பாட்டியாலாவில் 2021 தேசிய சாம்பியன் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் 2:02.57 நிமிடங்களில் இலக்கை எட்டினார்.
  • 2020: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.
  • 2016: வியட்நாமின் ஹோ சி-மினில் நடந்த ஆசிய இளையோருக்கான சாம்பியன் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sportstar, Team (2023-10-01). "Asian Games: Harmilan Bains wins silver in women's 1500m; Ajay Kumar, Jinson Johnson take silver and bronze in men's 1500m". Sportstar (in ஆங்கிலம்). Retrieved 2023-10-01.
  2. "Asian Games: Ajay Kumar, Harmilan Bains and Jinson Johnson win medals after impressive show in 1500m race". India Today (in ஆங்கிலம்). Retrieved 2023-10-01.
  3. "Asian Games 2023 Day 8 Live Updates: India clinch shooting silver". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-10-01. Retrieved 2023-10-01.
  4. "Athletics: Sable, Tajinderpal win gold; silver for Sreeshankar, Ajay Kumar, Harmilan Bains & Jyothi Yarraji". OnManorama. Retrieved 2023-10-01.
  5. "Asian Games, women's 1500m: 'Chena Toast' sweet from Lucknow awaits Harmilan Kaur Bains as the parents, international athletes themselves, await her return". The Indian Express (in ஆங்கிலம்). 2023-10-01. Retrieved 2023-10-01.
  6. 6.0 6.1 K, Baraneetharan (2023-10-01). "Sportskeeda-supported athlete Harmilan Bains wins Asian Games Silver in 1500m". sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-01.
  7. "Athletics: Harmilan Bains & Ajay Kumar secure silver, Jinson Johnson claims bronze at Asian Games 2023". Khel Now (in English). Retrieved 2023-10-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. Panicker, Amar Sunil (2023-10-01). "Asian Games: Harmilan Bains Secures Silver in the Women's 1500m Race". news18.com. Retrieved 2023-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்மிலன்_பெயின்ஸ்&oldid=3904017" இலிருந்து மீள்விக்கப்பட்டது